சித்தப்பித்தன்
11 August 2026
எல்லைகள் இல்லா
இந்த மேடையில்,
எவருமறியா திரைக்குப் பின்
எழுந்திருக்கும் வெறி!
ஆடுபவன் நானா?
ஆட்டுவிப்பவன் நீயா?
விதி என்னும் கயிற்றில்
பிணைக்கப்பட்ட பொம்மைகளின்
திசைமாறிய அசைவுகள்!
விழுந்தும் எழாத பிம்பங்கள்,
நின்றும் நிலைக்காத நிழல்கள்,
சுற்றிச் சுழலும்
காலத்தின் வன்முறை!
வலியும் சுகமும்
கலந்திருக்கும் இந்தத் தாளத்தில்,
தேவைக்கு மிஞ்சிய
வெற்றுச் சலனங்கள்!
திரை விழும் நொடி வரை
நிறுத்தத் துடிக்கும்...
இந்த
ஆடாத ஆட்டம்!
வாழ்வினில்...
Click any word to see its meaning.
—
Your rating:
This verse online
Related
Kavithaigal
அர்த்தமற்ற கவிதைகள்
சொற்களின் கோர்வையில்
சிக்காத ஒரு வெறுமை,
பொருட்களின் தேடலில்
சிதைந்து போகும் வரிகள்.
Same collection
Kavithaigal
கோரத்தின் அழகு
வெளியில் முற்றிய அழகை,
ஒழுங்கே பெற்றிருந்தாலும்...
அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும்
அகோர மனம்!
Same collection
Kavithaigal
நிழலின் பிம்பம்
எனதென்பதை இழந்த நொடியில்
நிஜம் தொலைத்த நிழலாய்!
சூரியன் தகிக்கும் வேளையில்,
தொடர்ந்த நீண்ட நிழல்...
Same collection
Comments
No comments yet. Be the first.