சித்தப்பித்தன்
10 ஆகஸ்ட் 2026
சிறப்புஆய்ப் பாயும் குருதியின் வேகத்தால்
உறைந்த உணர்வுகள் ஊசலாம் - குறைவின்றி
கள்ளமில் லாப்பெண்ணைக் கனிவாகக் காப்பதே
தெள்ளிய மாந்தர் திறம்.
எந்தச் சொல்லையும் சொடுக்கினால் அதன் பொருள் தோன்றும்.
பொழிப்புரை
சிறப்பாகப் பாயும் இந்த உதிரப்போக்கின் வேகத்தால் (ஹார்மோன் மாற்றங்களால்), பெண்ணின் மனதில் உறைந்திருக்கும் உணர்வுகள் ஊசல் போல மாறிமாறி ஆடும். அந்த நேரத்தில், கள்ளமில்லாத அந்தப் பெண்ணைக் குறையின்றிப் புரிந்துகொண்டு கனிவாகப் பாதுகாப்பதே தெளிந்த அறிவுடைய மனிதர்களின் திறமையாகும்.
—
உங்கள் மதிப்பீடு:
இந்தச் செய்யுளை இணையத்தில் காண
தொடர்புடையவை
வெண்பா
செந்நீர் மாண்பு
திங்கள் சுழற்சியில் செந்நீர் வெளிவரல்
மங்கையர் தேகத்து மாண்பாகும் - துங்க
உயிர்களை மண்ணில் உதிக்கவே செய்யும்
செயலது விந்தையின் சீர்.
அதே தொகுப்பு
வெண்பா
கருவாக்கும் குருதி
சீர்ஆன பூப்பைத் தீட்டென்று சொல்லியே
ஊரார் ஒதுக்குதல் ஊனமே - நேராக
மண்ணில் மழலை மலரக் கருவாகும்
பெண்ணின் உதிரம் பெருமை.
அதே தொகுப்பு
வெண்பா
மலைநிகர் மங்கை
பெருமைக் குரிய பெருநிகழ்வால் நெஞ்சில்
உருவாகும் சோர்வை உடைப்பாள் - தருமமிகு
வலியினைத் தாங்கி மலையென நிற்பாள்
பொலிவோடு பெண்ணவள் பார்.
அதே தொகுப்பு
கருத்துகள்
இன்னும் கருத்து எதுவும் இல்லை. முதல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும்.