சித்தப்பித்தன்
10 ஆகஸ்ட் 2026
ஆவாள் உயிரை அளிக்கும் உழத்தியாய்
காவாய் கருப்பை கசிந்தொழுக - நாளும்
உதிரத்தைப் பாய்ச்சி உயிர்ப்பயிரை ஏந்தும்
மதுர நிலமவள் மாண்பு.
எந்தச் சொல்லையும் சொடுக்கினால் அதன் பொருள் தோன்றும்.
பொழிப்புரை
அவள் உயிர்களை உருவாக்கும் ஒரு விவசாயியாக (உழத்தி) மாறுகிறாள். அவளைப் பாதுகாக்கும் கருப்பையானது உதிரத்தைக் கசியவிடுகிறது. ஒரு விளைநிலம் எப்படி நீரைப் பாய்ச்சிப் பயிரை வளர்க்கிறதோ, அதுபோல அவள் தன் உதிரத்தைப் பாய்ச்சி உயிர்ப்பயிரைச் சுமக்கப் போகும் இனிமையான விளைநிலமாக இருப்பது அவளது மாண்பாகும்.
—
உங்கள் மதிப்பீடு:
இந்தச் செய்யுளை இணையத்தில் காண
தொடர்புடையவை
வெண்பா
செந்நீர் மாண்பு
திங்கள் சுழற்சியில் செந்நீர் வெளிவரல்
மங்கையர் தேகத்து மாண்பாகும் - துங்க
உயிர்களை மண்ணில் உதிக்கவே செய்யும்
செயலது விந்தையின் சீர்.
அதே தொகுப்பு
வெண்பா
கருவாக்கும் குருதி
சீர்ஆன பூப்பைத் தீட்டென்று சொல்லியே
ஊரார் ஒதுக்குதல் ஊனமே - நேராக
மண்ணில் மழலை மலரக் கருவாகும்
பெண்ணின் உதிரம் பெருமை.
அதே தொகுப்பு
வெண்பா
மலைநிகர் மங்கை
பெருமைக் குரிய பெருநிகழ்வால் நெஞ்சில்
உருவாகும் சோர்வை உடைப்பாள் - தருமமிகு
வலியினைத் தாங்கி மலையென நிற்பாள்
பொலிவோடு பெண்ணவள் பார்.
அதே தொகுப்பு
கருத்துகள்
இன்னும் கருத்து எதுவும் இல்லை. முதல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும்.