சித்தப்பித்தன்
10 ஆகஸ்ட் 2026
நெஞ்சில் குடிபுகுந்த நேசத் தனித்துணையே
அஞ்சல் எனவபயம் தந்துமே—நெஞ்சாரக்
கண்போல் எனைக்வாழ்த்திக் காக்குமே எப்போதும்
நண்பனாம் ஈசன் நமக்கு!
எந்தச் சொல்லையும் சொடுக்கினால் அதன் பொருள் தோன்றும்.
பொழிப்புரை
என்னுடைய நெஞ்சில் நிலையாகக் குடிபுகுந்த, நிகரற்ற அன்புத் துணையே! "அஞ்சாதே" என்று அபயக்கரம் தந்து, தன் கண் போல என்னைக் காத்து வாழ்த்தும் ஈசன், எப்போதும் நமக்கு எல்லாமாய் விளங்கும் உண்மையான நல் நண்பன் ஆவான்.
—
உங்கள் மதிப்பீடு:
இந்தச் செய்யுளை இணையத்தில் காண
தொடர்புடையவை
சிவ வெண்பாக்கள்
சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள்
சித்தம் சிவமாக்கிச் செப்பிடுமிந் நூல்தழைக்க
நித்தமும் நமச்சி வாயநம - வித்தகமாய்ப்
பித்தன் எனநின்று பேரின்பம் ஈந்துலகை
உய்த்திடுவான் தாளே துணை.
அதே பா வகை
சிவ வெண்பாக்கள்
சிவ-சீவ ஐக்கியம் : ஆதி நிலை - 1
அப்பன் சிவனருளால் ஆவனயாம் எவ்வுயிரும்
செப்பரிய சோதித் திருவுருவே - செப்பினால்
அவனன்றி நானில்லை நானின்றி ஈசன்
புவனத்தில் இல்லை புரிந்து.
அதே பா வகை
சிவ வெண்பாக்கள்
திருவருள் வெண்பா
தீமை யழித்துச் செழுஞ்சமூ கங்காக்கும்
தூயவடி வீசன் துணையாவான் — நேர்மையுடன்
எந்நாளும் நல்வாழ்வு ஈந்தருளும் எம்பெருமான்
பொன்னார் கழலே புகல்.
அதே பா வகை
கருத்துகள்
இன்னும் கருத்து எதுவும் இல்லை. முதல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும்.