சித்தப்பித்தன்
11 ஆகஸ்ட் 2026
அப்பன் சிவனருளால் ஆவனயாம் எவ்வுயிரும்
செப்பரிய சோதித் திருவுருவே - செப்பினால்
அவனன்றி நானில்லை நானின்றி ஈசன்
புவனத்தில் இல்லை புரிந்து.
எந்தச் சொல்லையும் சொடுக்கினால் அதன் பொருள் தோன்றும்.
பொழிப்புரை
தந்தை சிவனின் அருளால் எல்லா உயிர்களும் தோன்றின. அவன் சொல்லற்கரிய ஒளி வடிவானவன். அவன் இல்லாமல் எனக்குத் தனி இருப்பு இல்லை; நான் (உயிர்) இல்லையென்றால் அவனுக்கு இந்த உலகத்தில் வெளிப்பாடு இல்லை.
—
உங்கள் மதிப்பீடு:
இந்தச் செய்யுளை இணையத்தில் காண
தொடர்புடையவை
சிவ வெண்பாக்கள்
சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள்
சித்தம் சிவமாக்கிச் செப்பிடுமிந் நூல்தழைக்க
நித்தமும் நமச்சி வாயநம - வித்தகமாய்ப்
பித்தன் எனநின்று பேரின்பம் ஈந்துலகை
உய்த்திடுவான் தாளே துணை.
அதே தொகுப்பு
சிவ வெண்பாக்கள்
திருவருள் வெண்பா
தீமை யழித்துச் செழுஞ்சமூ கங்காக்கும்
தூயவடி வீசன் துணையாவான் — நேர்மையுடன்
எந்நாளும் நல்வாழ்வு ஈந்தருளும் எம்பெருமான்
பொன்னார் கழலே புகல்.
அதே பா வகை
சிவ வெண்பாக்கள்
சிவன் வெற்றி வெண்பா
ஆல முண்டான் அடியாரைக் காத்திடவே
காலனை யுதைத்துக் காய்ந்தானே — ஞாலத்து
வெற்றி வடிவேலன் தந்தை விறல்சிவன்
நற்றாள் தொழநமக் குண்டு.
அதே பா வகை
கருத்துகள்
இன்னும் கருத்து எதுவும் இல்லை. முதல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும்.