All pieces

85 results

  1. செய்ந்நன்றி - 10 கற்ற தொழிலை விருப்புடனே நாஞ்செய்ய உற்ற பெரும்பொருள் ஓங்கியதே; - நற்றவத்தால் குற்ற மிலாது குறையின்றி வாழவே பெற்றேனே நற்சிவனே பேறு.
  2. செய்ந்நன்றி - 9 உற்ற நினைவெல்லாம் உன்னதமாய்ச் செய்திடவும் சுற்ற நினைத்த பொழுதினில் ஏகவும் - நற்றுணையாய்ப் பெற்றதொரு நன்மனத்தைப் பேரருளாய் எந்நாளும் பெற்றேனே நற்சிவனே பேறு.
  3. செய்ந்நன்றி - 8 செற்றலரை அண்டவிடார்; சேர்ந்ததொரு துன்பத்தில் உற்ற துணையாகி யுள்ளன்பால் முன்நிற்பார்; - நற்றவத்தால் சுற்றமாய் நின்ற உடன்பிறப்பை நற்றுணையாப் பெற்றேனே நற்சிவனே பேறு.
  4. செய்ந்நன்றி - 7 உற்ற உலகறிவை ஏற்றம்போல் கற்பித்து முற்றுமாய் வாழும் பொழுதெல்லாம் - நற்றுணையாய் உற்று வழிகாட்டும் மேன்மக்கள் நற்குருவைப் பெற்றேனே நற்சிவனே பேறு.
  5. செய்ந்நன்றி - 6 உற்ற உடல்நலமும் ஊர்போற்றும் சிந்தனையும் குற்றமிலா நற்குணமும் கொண்டிலங்க; - நற்றவத்தால் கற்றறிந்து மேலோங்கும் கண்ணிய நன்மக்களைப் பெற்றேனே நற்சிவனே பேறு
  6. செய்ந்நன்றி - 5 ஆற்றும் அரவணைப்பை அன்பாக எந்நாளும் ஊற்றும் உயிரன்பால் ஓங்கி வளர்த்தார்; - பெருமையாய்ப் போற்றும் தகுதியுள்ள பெற்றோரைப் பெற்றேன் சிவனே அளித்தாய் சிறந்து.
  7. செய்ந்நன்றி - 4 கற்றல் சிறக்கக் கவினார் தொடர்கல்வி பற்றாகத் தந்தாய் பரமனே! - நற்றவத்தால் பெற்றேன் பெருமையைப் பேரின்ப மாகவே பெற்றேனே பேறாய்ச் சிவனே.
  8. செய்ந்நன்றி - 3 இல்லமும் நானும் இனிதாக வாழ்வதற்குப் நல்லருளை ஈந்தாய் அரனே! - அகிலத்தில் அல்லல்கள் தீர்க்கும் அரணாகி நின்றதனால் வெல்லும் பெருங்காவல் பேறு.
  9. செய்ந்நன்றி - 2 ஊன மிலாத உடலளித்தாய்; உய்வதற்கு ஊன மிலாத உளமளித்தாய்; - தேனார் சிவனே உனைப்போற்றும் சீரிய பேற்றை வரமே அளித்தாய் மகிழ்ந்து.
  10. செய்ந்நன்றி - 1 மானிடமாய் இம்மா நிலத்தில் பிறப்பெடுத்து தேனிசனைப் போற்றும் வரம்பெற்றேன் - ஊனில் உருகி உமையாளன் சேவடியை நாளும் தொழுதேத்த வாய்த்ததுவே பேறு.
  11. சிவ-சீவ ஐக்கியம் : ஆதி நிலை - 1 அப்பன் சிவனருளால் ஆவனயாம் எவ்வுயிரும் செப்பரிய சோதித் திருவுருவே - செப்பினால் அவனன்றி நானில்லை நானின்றி ஈசன் புவனத்தில் இல்லை புரிந்து.
  12. சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள் சித்தம் சிவமாக்கிச் செப்பிடுமிந் நூல்தழைக்க நித்தமும் நமச்சி வாயநம - வித்தகமாய்ப் பித்தன் எனநின்று பேரின்பம் ஈந்துலகை உய்த்திடுவான் தாளே துணை.
  13. வாடிக்கையின் வேடிக்கை இயந்திரத் தாளமிடும் தினசரிச் சுழற்சி; நேற்றைய விடியலின் அதே தொடர்ச்சி!
  14. வெட்கத்தின் கூச்சம் கன்னங்களின் சிவப்பில் காதல் பூக்கும் வசந்தம்; சொல்லத் துடிக்கும் வார்த்தை நாக்கின் நுனியில் முட்டி,
  15. சொற்களின் பற்கள் மென்மையாகத் தீண்டினாலும் வலியெடுக்கும் வன்மம், இதழ்களின் மறைவில் ஒளிந்திருக்கும் கூர்மை!
  16. குழலின் புயல் மென்மையான இசையின் மறைவில் ஒளிந்திருக்கும் மௌனத்தின் பேரிரைச்சல்!  
  17. அகத்தின் புறம் வெளியே தெரியும் பிம்பம், உள்ளே உறையும் நிழலின் ஒற்றைப் பிரதிபலிப்பு!  
  18. ஆட்டத்தின் ஆட்டம் நகர்த்தும் கைகளில் நடுங்கும் காய்கள்; மேடையின் விதிகளோ முடிவற்ற நுணுக்கங்கள்!
  19. புதிரின் புதிர் விடை காண முயலும் விசித்திரமான வேட்கை; ஒவ்வொரு விடைக்குள்ளும் ஒளிந்திருக்கும் புதிய கேள்வி!
  20. கல்வியில் கேள்வி புத்தகப் பக்கங்களில் புதைந்து கிடக்கும் விடை; கேள்வி கேட்கும் அறிவோ கேள்வியாய் நின்று தவிக்கும்!
  21. பக்தியின் முக்தி வெளிப்புறச் சடங்கின் வெற்றுப் படலங்கள் விலக, உள்ளே உறையும் உண்மையின் தரிசனம்!
  22. உளியின் வலி கல்லை உடைக்கும் போது அறிவதில்லை பாறை; உளியின் ஒவ்வொரு அடிக்கும் பின்னே, உருவாகும் தெய்வத்தின் விளிம்பு!
  23. சிந்தனை துகள் கடல் முழுவதையும் கண்ணாடிக்கு அடியில் சிறைவைக்க முயலும் அற்பத்தனமான ஆசை!  
  24. அறத்தின் ஆற்றல் அநீதியின் புயல் வீசும் அனல் மிகுந்த காலத்திலும், அசையாது நின்றிருக்கும் அறத்தின் மெல்லிய வேர்!
  25. ஆடாத ஆட்டம் எல்லைகள் இல்லா இந்த மேடையில், எவருமறியா திரைக்குப் பின் எழுந்திருக்கும் வெறி!
  26. வியக்கும் விந்தை அதிசயங்கள் யாவும் அருகில் இருந்தும், அறியாமல் தேடும் அகத்தின் அசட்டுத்தனம்!
  27. திசை மாற்றம் திட்டமிட்ட பாதைகள் திசை மாறிப் போக, திசையற்ற வெளியில் தத்தளிக்கும் ஒரு பயணம்!
  28. மாலை மாற்று ஆதியும் அந்தமும் ஒன்றாய் இணையும், காலத்தின் இருபுறக் கண்ணாடிப் பிம்பம்!
  29. முற்றிலும் முற்றும் தொடங்கிய யாவும் தொலைந்து போகும், தொடுவானம் தொட்டபின் தோன்றும் சூனியம்!
  30. உலகின் மாயம் கண்ணுக்குள் பிம்பங்கள், கண்டே ஏமாறும் கானல் நீரின் ஆட்டம்!  
  31. இயக்கத்தின் ஓய்வு சுழலும் பிரபஞ்சத்தின் சுவடு படியாத அணுவின் துடிப்பு! இடைவிடாது ஓடும் காலத்தின் இடையில் ஒரு கணத்துத் துளி.
  32. தேடலின் இழப்பு கிடைத்தவை யாவும் நழுவ, தேடித் தேடி அலையும் தீராத அலைச்சலின் முடிவு!  
  33. விபத்தின் திட்டம் எதிர்பாராத அதற்கு சான்றோர் இட்டபெயர் காலத்தின் சுழற்சியில் வரையறுக்கப்பட்ட
  34. நிழலின் பிம்பம் எனதென்பதை இழந்த நொடியில் நிஜம் தொலைத்த நிழலாய்! சூரியன் தகிக்கும் வேளையில், தொடர்ந்த நீண்ட நிழல்...
  35. கோரத்தின் அழகு வெளியில் முற்றிய அழகை, ஒழுங்கே பெற்றிருந்தாலும்... அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும் அகோர மனம்!
  36. அர்த்தமற்ற கவிதைகள் சொற்களின் கோர்வையில் சிக்காத ஒரு வெறுமை, பொருட்களின் தேடலில் சிதைந்து போகும் வரிகள்.
  37. கனவுக்குள் தூக்கம் விழித்திருக்கும் உலகை துறந்த, மாயம் நிறைந்ததொரு பெருங்கனவு.  
  38. காலத்தின் முடக்கம் நொடிகள் நகர மறுத்து, நிமிடங்கள் உறைந்துபோக, செயலிழந்து நிற்கும் ஒரு விசித்திரப் பொழுது.
  39. மரணத்தில் வாழ்வு என்றும் மாறாமல் நிலைத்து வாழ்வது மரணம் மட்டுமே!  
  40. வீழ்ச்சியின் எழுச்சி வானளவு நிற்கும் மாமலையில், சிகரம் தொட்டுத் தொடங்கி. துள்ளிக் குதித்து, தரை தொடத் துடிக்கும்
  41. சுவடில்லா தடம் மண்ணில் பதியாத பாதங்கள், மனதில் மட்டும் ஆழமாய் அழுத்திய நினைவுகள்.  
  42. அழுகையின் சிரிப்பு கண்ணீர்த் துளிகளை கண்களுக்குள் சிறைவைத்து, உதடுகளில் கட்டாயமாய் பூக்க வைக்கும் பொய்நகை.
  43. மௌனத்தின் சத்தம் காதுகளைப் பிளக்கும் கண்ணீரின் பெருஞ்சத்தம். எவரும் கேட்கவியலாத உள்ளத்தின் அழுகுரல்.
  44. அனைத்தும் சிவமே வெண்பா அண்டம் அனைத்தும் ஈசன் வடிவாகும்; கண்ட பொருளும் அரனார் அருளாகும்; - அன்பர்க்கு எங்கும் சிவமே எனவுணரும் மெய்ஞானம் பொங்கும் அருளே உறும்.
  45. திருவருள் வெண்பா தீமை யழித்துச் செழுஞ்சமூ கங்காக்கும் தூயவடி வீசன் துணையாவான் — நேர்மையுடன் எந்நாளும் நல்வாழ்வு ஈந்தருளும் எம்பெருமான் பொன்னார் கழலே புகல்.
  46. சிவன் வெற்றி வெண்பா ஆல முண்டான் அடியாரைக் காத்திடவே காலனை யுதைத்துக் காய்ந்தானே — ஞாலத்து வெற்றி வடிவேலன் தந்தை விறல்சிவன் நற்றாள் தொழநமக் குண்டு.
  47. அறமெனும் பூப்பு திறம்பாடுங் காருண்யப் பூப்பினை யென்றும் அறம்போல் அகத்தில் அறிவோம் - நிறம்வாழப் பெண்ணாய் உதித்த பெருமையைப் போற்றிடவே மண்ணில் மிளிரும் வியப்பு.
  48. உணர்வுகளின் ஊசல் சிறப்புஆய்ப் பாயும் குருதியின் வேகத்தால் உறைந்த உணர்வுகள் ஊசலாம் - குறைவின்றி கள்ளமில் லாப்பெண்ணைக் கனிவாகக் காப்பதே தெள்ளிய மாந்தர் திறம்.
  49. பிறப்பின் மூலம் என்பார் பெரியோர் இதுபுனித இரத்தமென்று அன்பால் அகிலம் அகமகிழ - முன்பே பிறப்பிற்கும் மூலப் பெருமை இதுவே சிறப்பாய்ப் போற்றுதல் சிறப்பு.
  50. படைப்பின் இறைவி செயல்ஆல் உலகைச் செழிக்கவே செய்யும் இயற்கையின் அற்புதம் இஃதே - மயக்கத்தால் கல்லா மூடரைக் கடிந்தொதுக் கிப்புவியே எல்லாம் இறைவி என்பார்.
  51. கருப்பையின் விழிநீர் மகிழ்வுஆய்க் கருப்பை மகவைச் சுமக்கா இகழ்வில் விழிநீர் இதுவே - தகுதியாய்ப் பத்தாம் திங்களில் பச்சிளஞ் சேய்தர சுத்தமாய் ஆக்கும் செயல்.
  52. பழமையிருள் களைதல் அழகுஆன மெய்ப்பாட்டை அஞ்சிக் குறைகூறும் பழமை இருளைப் பகர்வோம் - முழக்கமிட்டு கட்டுப் படிகடந்து கன்னி வெளியேவா மட்டற்ற பூப்பு மகிழ்வு.
  53. கனிவுறு காப்பு மாண்புடைய பெண்ணை மதித்துந் தினமுமே காண்போம் கனிவாய்க் கருணையால் - பூண்நிறைந்த பொன்னான தேகம் பொலிவுபெற ஓய்வினை அந்நாளில் ஈதல் அழகு.
  54. உயிர்ப்பயிர் உழத்தி ஆவாள் உயிரை அளிக்கும் உழத்தியாய் காவாய் கருப்பை கசிந்தொழுக - நாளும் உதிரத்தைப் பாய்ச்சி உயிர்ப்பயிரை ஏந்தும் மதுர நிலமவள் மாண்பு.
  55. திங்கள் சுழற்சி பார்இல் நிலவு பவனிவரு தல்போல நாரியும் திங்கள் நடைபெறுவாள் - சீராய் உடலைப்பு துப்பித்து உன்னதப் பேற்றை அடையத் தயாரா வாள்.
  56. மலைநிகர் மங்கை பெருமைக் குரிய பெருநிகழ்வால் நெஞ்சில் உருவாகும் சோர்வை உடைப்பாள் - தருமமிகு வலியினைத் தாங்கி மலையென நிற்பாள் பொலிவோடு பெண்ணவள் பார்.
  57. கருவாக்கும் குருதி சீர்ஆன பூப்பைத் தீட்டென்று சொல்லியே ஊரார் ஒதுக்குதல் ஊனமே - நேராக மண்ணில் மழலை மலரக் கருவாகும் பெண்ணின் உதிரம் பெருமை.
  58. செந்நீர் மாண்பு திங்கள் சுழற்சியில் செந்நீர் வெளிவரல் மங்கையர் தேகத்து மாண்பாகும் - துங்க உயிர்களை மண்ணில் உதிக்கவே செய்யும் செயலது விந்தையின் சீர்.
  59. பேறுபெற்றவர் வாழ்வு மண்ணில் புகழோடு வானோர் நலம்பெற்று எண்ணும் பொருளும் இனிதுவாழ - நண்ணியே எல்லா வளமும் ஒருங்கே எழில்பெற இல்லறம் காணும் இனிது.
  60. இன்பம் முக்தி (நிம்மதி) எண்ணமெல்லாம் ஈசன் இணையடியில் வைத்துப் புண்ணியம் செய்தே புகுந்தின்பம் - நண்ணி அமைதி யடைந்து அகிலந் துறப்பதே சுமையற்ற முக்திச் சுகம்.
  61. நல்ல விதி (நல்வினை) முற்பகல் செய்த நல்வினையே முன்னேறி நற்பலன் நல்கும் நல்விதியாம் - எக்காலும் நன்மை பயக்கும் நறுமணம் போலே புன்மை அகற்றும் புகழ்.
  62. பொன் (தங்கம்) மங்கலச் சீரளிக்கும் மாண்புடைய பொன்னே தங்க நிகரெனத் தழைக்கும் - எங்குமே மதிப்பினைத் தந்து மனமகிழ்வு நல்கும் விதிப்பயனால் வாய்க்கும் விருந்து.
  63. வெற்றி (ஜெயம்) தொட்டனைத்தும் துலங்கத் தொடர்ந்தே வெற்றியும் கிட்டுமே நற்செயலால் கெம்பீர - மாகவே வெற்றித் திருமகள் விளையாடும் வீடென முற்றிலும் முற்றியே முந்து.
  64. நன்மக்கள் (பிள்ளைகள்) தந்தைக்கும் தாய்க்கும் தகுந்த புகழ்தந்து சிந்தை வியக்கும் நன்மக்கள் - முந்தையோர் செய்த தவம்வந் திணையுமிந்தப் புவியினில் உய்தி அளிக்கும் உயிர்.
  65. அழகு (பொலிவு) அகத்தின் அழகே அணிபெறத் தோன்றும் முகத்தின் பொலிவாய் முதிரும் - மிகத்தகுந்த கண்ணியமே மேனி கவினாய்ப் பொலிந்திடப் புண்ணியம் செய்தார்ப் பொருள்.
  66. தானியச் செல்வம் (உணவு) பசியெனும் தீயைப் பனிபோல் அணைக்கும் நசையறு தானியம் நல்கும் - இசைசேர உண்பார் மகிழ உலகளிக்க வல்லதே வண்பார் நிலத்தின் வளம்.
  67. பொருட்செல்வம் (செல்வம்) அறவழியில் ஈட்டும் அரும்பொருளே வாழ்வின் திறமான செல்வமாய்த் திகழும் - புறமே இரவாது வாழ்வளிக்கும் ஈடில்லா நிதியைப் பரவாப் புகழாய்ப் பணி.
  68. இளமை (உற்சாகம்) தளர்விலா ஊக்கம் தகுந்த இளமை ஒளிரும் முகத்தோடு உவகை - களங்கமில்லா உள்ளக் களிப்பே உயிர்ப்பாம் இளமையென வள்ளல் அன்னை வழங்கல்.
  69. ஆற்றல் (வலிமை) ஆற்றல் மிகுந்தே அகிலம் அதுவெல்ல போற்றும் புகழே பொலிந்திடும் - மாற்றமில்லா வீரம் விளைந்த விளைநிலமே கீர்த்தியாம் பேறெனவே கொள்வாய் பெரிது.
  70. ஆயுள் (நீண்ட வாழ்நாள்) பிணியில்லா மெய்யும் பெருகுமோர் ஆயுள் மணியெனவே காக்கும் மகிழ்வாம் - துணிந்து அறமே புரிந்து அகலிருள் நீக்கி நிறைவாழ்வு கொள்வார் நிலத்து.
  71. கல்வி (அறிவு) கற்றார் அறிவே கடல்சூழ் புவியாளும் பொற்றார் நிதியினும் பொலிவாம் - எற்றே அழிவில்லா மெய்ஞானம் அண்டத்துள் ஓங்கி வழித்துணை யாகும் மதி.
  72. துணிவு (தைரியம்) அஞ்சாமை கொண்டாரே ஆள்வார் புவியதனை வெஞ்சூழ் வினையனைத்தும் வேரறுக்கும் - நஞ்செனவே ஏறுநடை கொண்ட துணிவே எழிற்பெருஞ்சீர் பேறுகளுள் மிக்கதொரு பேறு.
  73. திண்மனம் (மன உறுதி) இடுக்கண் வருங்கால் இடர்நீக்கும் திண்மை நடுக்கமில் உள்ளம் நலம்சேர் - கொடுக்கின்ற திண்மனமே வாழ்வின் திருவாம் எனைத்தும் விண்மணக்கும் வெற்றியைத் தரும்.
  74. நற்பெயர் (பெருமை) ஒழுக்கம் உடைமை உயர்குலமாம் என்றும் வழுவா நற்பெயரே வாழ்வாம் - விழுமிய சீரே பெருமை திருந்தும் உலகினில் பேரே புகழாய்ப் பெரும்.
  75. புகழ் (கீர்த்தி) திக்கெட்டும் போற்றும் திருவார் புகழுண்டேல் எக்காலும் அழியா இளமையாம் - தக்கார் நலம்வாழச் செய்யும் நறுமணம் போலப் புலவர் புகழும் புகழ்.
  76. 16 செல்வங்கள் துணிவுகல்வி ஆயுள்அடல் தோய்ந்தபுகழ் கீர்த்தி அணியிளமை திண்மனம்நேர் அத்தம் - மணிதானியம் அழகுநன் மக்கள்வெற்றி நல்விதிபொன் இன்பம் பதினாறு பேறும் பெறு.
  77. தோழமைத் துணையாக சிவன் நெஞ்சில் குடிபுகுந்த நேசத் தனித்துணையே அஞ்சல் எனவபயம் தந்துமே—நெஞ்சாரக் கண்போல் எனைக்வாழ்த்திக் காக்குமே எப்போதும் நண்பனாம் ஈசன் நமக்கு!
  78. தமிழ்ப் பித்தன் சித்தன்யான் தமிழ்ப்பற் றாலே பித்தநான் இப்புவிக்கே அத்தன் அருளால்புண்ணி யப்பன் - வழியான் நித்தமும் என்னுயிரால் என்றும் வினையாற்ற சித்தமாய் வந்திப்பேன் இன்று.
  79. சிவசரணாகதி அப்பனே சிவனேஎன் ஆருயிர் நாதனே! அகிலத்தை ஆளுகின்ற அரசே யப்பா! எப்பொழுதும் என்சிந்தை எண்ணமும் செயல்களும்! எல்லாமும் நீயாக நின்றா யப்பா!
  80. சிவ வெண்பா **இருவினைத் தீயை இடறிக் களைந்து மருவினைத் தீர்க்கும் மதியாய் - ஒருநொடிக்குள் ஈசன் எனையிழுத்துத் தன்வசமாத் தந்திடுவான் வீசும்கருணை வியன்.**
  81. வாசிப்பின் அவசியம் அவைத் தலைமைக்கும், சான்றோர்களுக்கும், என் அருமை நண்பர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள்!     நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
  82. கண்ணாடி முன்னாடி என்னடி கண்ணாடி முன்னாடி என்னடி பண்ணொன்று நீர்கேட்க வந்தது கேளேன் நிழல்காட்டும் நிலையாடியின் சிறப்புமது மண்ணிலே கலந்த மாயப் பொருளினாய்
  83. அறியாமை நீங்குதல் நீல விடம்உண்ட நிர்மலனைக் காளத்தியான் ஆல நிழலமர்ந்த அண்ணலை — ஞாலத்து அன்போடு போற்றித் துதிப்பார்க்கு வல்வினைகள் முன்போல நில்லா முறிந்து.
  84. இறைவனின் பெருமை ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி பாதி உமையாளோடும் பங்கினனாய் — வேதியனாய் நெற்றிக்கண் காட்டி வினைதீர்க்கும் ஈசனைநாம் பற்றிடவே தீரும் பிணி.
  85. வெண்பா எண்ணிதயத் துள்ளே இனிக்கும் இறைவனவன் கண்ணிமைப்போல் காக்கும் கழலடியான் — மண்ணுலகில் ஈடில்லா அன்பு நிறைத்தென்னை ஆட்கொண்டான் நாடறியா என்னப்பன் ஈசன்.