சித்தப்பித்தன்
11 ஆகஸ்ட் 2026
வெளியில் முற்றிய அழகை,
ஒழுங்கே பெற்றிருந்தாலும்...
அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும்
அகோர மனம்!
யாரும் வெளிப்படுத்தாத,
சொல்லவும் படாத,
பொலிவை இழந்தே கிடக்கும்
ஒவ்வொருவருக்குள்ளும்.
தூசிதட்டி பூச்சுசெய்து,
வண்ணங்கள் ஆயிரம் கலந்தாலும்;
ஆங்கே அழகைத் தேடினாலும்,
கிடைக்காத ஆழ்கடல்!
அனைத்தையும் அறுத்து,
வெற்று நோக்கோடு பார்ப்பின்—
வெளிப்படுமே...
இந்த
கோரத்தின் அழகு!
உனக்குள்ளும்!
எந்தச் சொல்லையும் சொடுக்கினால் அதன் பொருள் தோன்றும்.
—
உங்கள் மதிப்பீடு:
இந்தச் செய்யுளை இணையத்தில் காண
தொடர்புடையவை
கவிதைகள்
அர்த்தமற்ற கவிதைகள்
சொற்களின் கோர்வையில்
சிக்காத ஒரு வெறுமை,
பொருட்களின் தேடலில்
சிதைந்து போகும் வரிகள்.
அதே தொகுப்பு
கவிதைகள்
நிழலின் பிம்பம்
எனதென்பதை இழந்த நொடியில்
நிஜம் தொலைத்த நிழலாய்!
சூரியன் தகிக்கும் வேளையில்,
தொடர்ந்த நீண்ட நிழல்...
அதே தொகுப்பு
கவிதைகள்
விபத்தின் திட்டம்
எதிர்பாராத அதற்கு
சான்றோர் இட்டபெயர்
காலத்தின் சுழற்சியில்
வரையறுக்கப்பட்ட
அதே தொகுப்பு
கருத்துகள்
இன்னும் கருத்து எதுவும் இல்லை. முதல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும்.