சித்தப்பித்தன்
11 August 2026
கடல் முழுவதையும்
கண்ணாடிக்கு அடியில் சிறைவைக்க
முயலும் அற்பத்தனமான ஆசை!
பெருவெளியின் தத்துவத்தை
சிறியதொரு அணுவின்
முனையில் தேடும் தவிப்பு...
பிரித்துப் பார்த்தால்
புரியாத புதிர்;
சேர்த்து வைத்தாலோ
அர்த்தமற்ற பிதற்றல்!
ஆயிரம் கோணங்களில்
அலசி ஆராய்ந்தும்,
பிடிபடாத பேருண்மை...
ஆழமான மௌனத்தின்
நுனிநாக்கில் ததும்பும்
இந்த
சிந்தனை துகள்!
உள்ளூற...
Click any word to see its meaning.
—
Your rating:
This verse online
Related
Kavithaigal
அர்த்தமற்ற கவிதைகள்
சொற்களின் கோர்வையில்
சிக்காத ஒரு வெறுமை,
பொருட்களின் தேடலில்
சிதைந்து போகும் வரிகள்.
Same collection
Kavithaigal
கோரத்தின் அழகு
வெளியில் முற்றிய அழகை,
ஒழுங்கே பெற்றிருந்தாலும்...
அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும்
அகோர மனம்!
Same collection
Kavithaigal
நிழலின் பிம்பம்
எனதென்பதை இழந்த நொடியில்
நிஜம் தொலைத்த நிழலாய்!
சூரியன் தகிக்கும் வேளையில்,
தொடர்ந்த நீண்ட நிழல்...
Same collection
Comments
No comments yet. Be the first.