இறைவனின் பெருமை

ஈசனைநாம் பற்றிடவே தீரும் பிணி

வெண்பா 9 ஆகஸ்ட் 2026 சித்தப்பித்தன் 15 பார்வைகள்

என் அலமாரி →

தற்செயலாக ஒன்று
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி பாதி உமையாளோடும் பங்கினனாய் — வேதியனாய் நெற்றிக்கண் காட்டி வினைதீர்க்கும் ஈசனைநாம் பற்றிடவே தீரும் பிணி.

எந்தச் சொல்லையும் சொடுக்கினால் அதன் பொருள் தோன்றும்.

பொழிப்புரை

தொடக்கமும் முடிவும் இல்லாத பேரொளியாய் விளங்குபவன் சிவன். தன் உடலின் ஒரு பாதியை உமாதேவிக்கு அளித்தவன். நெற்றிக்கண்ணைத் திறந்து நம் வினைகளை நீக்கும் அந்த ஈசனை நாம் பற்றிக்கொண்டால், நம் வாழ்வில் உள்ள பிறவிப் பிணிகள் அனைத்தும் நீங்கிவிடும்.
— இன்னும் மதிப்பீடு இல்லை
உங்கள் மதிப்பீடு:

கருத்துகள்

இன்னும் கருத்து எதுவும் இல்லை. முதல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும்.

ஒரு கருத்து எழுதுங்கள்

விருப்பம். பொதுவில் காட்டப்படாது.

தொடர்புடையவை

சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள்
சிவ வெண்பாக்கள்

சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள்

சித்தம் சிவமாக்கிச் செப்பிடுமிந் நூல்தழைக்க நித்தமும் நமச்சி வாயநம - வித்தகமாய்ப் பித்தன் எனநின்று பேரின்பம் ஈந்துலகை உய்த்திடுவான் தாளே துணை.
11 ஆகஸ்ட் 2026 15

அதே பா வகை

சிவ-சீவ ஐக்கியம் : ஆதி நிலை - 1
சிவ வெண்பாக்கள்

சிவ-சீவ ஐக்கியம் : ஆதி நிலை - 1

அப்பன் சிவனருளால் ஆவனயாம் எவ்வுயிரும் செப்பரிய சோதித் திருவுருவே - செப்பினால் அவனன்றி நானில்லை நானின்றி ஈசன் புவனத்தில் இல்லை புரிந்து.
11 ஆகஸ்ட் 2026 14

அதே பா வகை

திருவருள் வெண்பா
சிவ வெண்பாக்கள்

திருவருள் வெண்பா

தீமை யழித்துச் செழுஞ்சமூ கங்காக்கும் தூயவடி வீசன் துணையாவான் — நேர்மையுடன் எந்நாளும் நல்வாழ்வு ஈந்தருளும் எம்பெருமான் பொன்னார் கழலே புகல்.
11 ஆகஸ்ட் 2026 21

அதே பா வகை