சித்தப்பித்தன்
10 ஆகஸ்ட் 2026
சீர்ஆன பூப்பைத் தீட்டென்று சொல்லியே
ஊரார் ஒதுக்குதல் ஊனமே - நேராக
மண்ணில் மழலை மலரக் கருவாகும்
பெண்ணின் உதிரம் பெருமை.
எந்தச் சொல்லையும் சொடுக்கினால் அதன் பொருள் தோன்றும்.
பொழிப்புரை
இவ்வளவு சிறப்பான மாதவிடாயைத் 'தீட்டு' என்று சொல்லிப் பெண்களை சமூகம் ஒதுக்கி வைப்பது ஒரு மனக்குறைபாடாகும் (ஊனம்). ஏனென்றால், இந்த மண்ணில் ஒரு குழந்தை நேரடியாக உருவாவதற்குக் காரணமாக இருக்கும் பெண்ணின் உதிரம் தீட்டல்ல, அது மாபெரும் பெருமையாகும்.
—
உங்கள் மதிப்பீடு:
இந்தச் செய்யுளை இணையத்தில் காண
தொடர்புடையவை
வெண்பா
செந்நீர் மாண்பு
திங்கள் சுழற்சியில் செந்நீர் வெளிவரல்
மங்கையர் தேகத்து மாண்பாகும் - துங்க
உயிர்களை மண்ணில் உதிக்கவே செய்யும்
செயலது விந்தையின் சீர்.
அதே தொகுப்பு
வெண்பா
மலைநிகர் மங்கை
பெருமைக் குரிய பெருநிகழ்வால் நெஞ்சில்
உருவாகும் சோர்வை உடைப்பாள் - தருமமிகு
வலியினைத் தாங்கி மலையென நிற்பாள்
பொலிவோடு பெண்ணவள் பார்.
அதே தொகுப்பு
வெண்பா
திங்கள் சுழற்சி
பார்இல் நிலவு பவனிவரு தல்போல
நாரியும் திங்கள் நடைபெறுவாள் - சீராய்
உடலைப்பு துப்பித்து உன்னதப் பேற்றை
அடையத் தயாரா வாள்.
அதே தொகுப்பு
கருத்துகள்
இன்னும் கருத்து எதுவும் இல்லை. முதல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும்.