சித்தப்பித்தன்
14 ஆகஸ்ட் 2026
ஊன மிலாத உடலளித்தாய்; உய்வதற்கு
ஊன மிலாத உளமளித்தாய்; - தேனார்
சிவனே உனைப்போற்றும் சீரிய பேற்றை
வரமே அளித்தாய் மகிழ்ந்து.
எந்தச் சொல்லையும் சொடுக்கினால் அதன் பொருள் தோன்றும்.
பொழிப்புரை
எந்த ஒரு குறையும் இல்லாத முழுமையான உடலை எனக்கு அளித்தாய்; நான் நல்வழியில் வாழ்ந்து உய்வதற்காக, எவ்வித மாசும் குறையும் இல்லாத தூய்மையான உள்ளத்தையும் அளித்தாய். தேன் போன்ற இனிமையான சிவனே! உன்னை நாள்தோறும் போற்றித் துதிக்கும் இந்தச் சிறப்பான பாக்கியத்தையும் நீயே எனக்கு மகிழ்ந்து வரமாக அளித்தாய்
—
உங்கள் மதிப்பீடு:
இந்தச் செய்யுளை இணையத்தில் காண
தொடர்புடையவை
சிவ வெண்பாக்கள்
செய்ந்நன்றி - 10
தொழில்வளப் பேறு
கற்ற தொழிலை விருப்புடனே நாஞ்செய்ய
உற்ற பெரும்பொருள் ஓங்கியதே; - நற்றவத்தால்
குற்ற மிலாது குறையின்றி வாழவே
பெற்றேனே நற்சிவனே பேறு.
அதே தொகுப்பு
சிவ வெண்பாக்கள்
செய்ந்நன்றி - 9
எண்ணியாங்கு எய்தும் வரம்
உற்ற நினைவெல்லாம் உன்னதமாய்ச் செய்திடவும்
சுற்ற நினைத்த பொழுதினில் ஏகவும் - நற்றுணையாய்ப்
பெற்றதொரு நன்மனத்தைப் பேரருளாய் எந்நாளும்
பெற்றேனே நற்சிவனே பேறு.
அதே தொகுப்பு
சிவ வெண்பாக்கள்
செய்ந்நன்றி - 8
உடன்பிறப்புப் பேறு
செற்றலரை அண்டவிடார்; சேர்ந்ததொரு துன்பத்தில்
உற்ற துணையாகி யுள்ளன்பால் முன்நிற்பார்; - நற்றவத்தால்
சுற்றமாய் நின்ற உடன்பிறப்பை நற்றுணையாப்
பெற்றேனே நற்சிவனே பேறு.
அதே தொகுப்பு
கருத்துகள்
இன்னும் கருத்து எதுவும் இல்லை. முதல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும்.