சித்தப்பித்தன்
11 ஆகஸ்ட் 2026
கல்லை உடைக்கும் போது
அறிவதில்லை பாறை;
உளியின் ஒவ்வொரு அடிக்கும் பின்னே,
உருவாகும் தெய்வத்தின் விளிம்பு!
வலியென்று கூச்சலிடும்
சிற்பத்தின் தவிப்பு—
சிதைக்கப்படுவதல்ல,
செதுக்கப்படுவதைக் காணும்
மௌனக் கண்கள்!
துண்டிக்கப்படும் கற்கள்
அழுகையின் அடையாளம் அல்ல;
அழகின் தேடலுக்காக,
அகற்றப்படும் தேவையற்ற சுமை!
உளியின் ஒவ்வொரு தழும்பும்
ஓர் ஓவியத்தின் பிறப்பு;
தாங்கிக் கொள்ளும் வலி—
தன்னைக் கரைத்து
தெய்வமாய் ஆவதற்கான
தவக் காலம்!
வலித்த போதெல்லாம்
வடிவம் பெறுவது;
இந்த
உளியின் வலி!
விந்தையில்...
எந்தச் சொல்லையும் சொடுக்கினால் அதன் பொருள் தோன்றும்.
—
உங்கள் மதிப்பீடு:
இந்தச் செய்யுளை இணையத்தில் காண
தொடர்புடையவை
கவிதைகள்
அர்த்தமற்ற கவிதைகள்
சொற்களின் கோர்வையில்
சிக்காத ஒரு வெறுமை,
பொருட்களின் தேடலில்
சிதைந்து போகும் வரிகள்.
அதே தொகுப்பு
கவிதைகள்
கோரத்தின் அழகு
வெளியில் முற்றிய அழகை,
ஒழுங்கே பெற்றிருந்தாலும்...
அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும்
அகோர மனம்!
அதே தொகுப்பு
கவிதைகள்
நிழலின் பிம்பம்
எனதென்பதை இழந்த நொடியில்
நிஜம் தொலைத்த நிழலாய்!
சூரியன் தகிக்கும் வேளையில்,
தொடர்ந்த நீண்ட நிழல்...
அதே தொகுப்பு
கருத்துகள்
இன்னும் கருத்து எதுவும் இல்லை. முதல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும்.