சித்தப்பித்தன்
11 August 2026
இயந்திரத் தாளமிடும்
தினசரிச் சுழற்சி;
நேற்றைய விடியலின்
அதே தொடர்ச்சி!
காலத்தின் கட்டாயத்தில்
கைதி ஆனோம்,
பழக்கத்தின் சங்கிலியில்
பணிந்து போனோம்!
மாற்றம் தேடும் மனம்
மழுங்கிப் போக,
வாழ்க்கை என்பது
வேடிக்கையாய் மாறிய
வாடிக்கை!
எதிர்பார்ப்பு ஏதும் இல்லா
ஏகாந்தப் பயணத்தில்,
சலிப்பின் விளிம்பில்
சிரித்து நிற்கும்
இந்த
வாடிக்கையின் வேடிக்கை!
நித்தியத்தில்...
Click any word to see its meaning.
—
Your rating:
This verse online
Related
Kavithaigal
அர்த்தமற்ற கவிதைகள்
சொற்களின் கோர்வையில்
சிக்காத ஒரு வெறுமை,
பொருட்களின் தேடலில்
சிதைந்து போகும் வரிகள்.
Same collection
Kavithaigal
கோரத்தின் அழகு
வெளியில் முற்றிய அழகை,
ஒழுங்கே பெற்றிருந்தாலும்...
அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும்
அகோர மனம்!
Same collection
Kavithaigal
நிழலின் பிம்பம்
எனதென்பதை இழந்த நொடியில்
நிஜம் தொலைத்த நிழலாய்!
சூரியன் தகிக்கும் வேளையில்,
தொடர்ந்த நீண்ட நிழல்...
Same collection
Comments
No comments yet. Be the first.