Seynandri Muzhakkam 9 / 108

செய்ந்நன்றி - 9

எண்ணியாங்கு எய்தும் வரம்

19 August 2026 Written: 19 August 2026 சித்தப்பித்தன் 14 views

My shelf →

Random piece
உற்ற நினைவெல்லாம் உன்னதமாய்ச் செய்திடவும் சுற்ற நினைத்த பொழுதினில் ஏகவும் - நற்றுணையாய்ப் பெற்றதொரு நன்மனத்தைப் பேரருளாய் எந்நாளும் பெற்றேனே நற்சிவனே பேறு.

Click any word to see its meaning.

Short meaning

என் மனதில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் மிகச் சிறப்பாகச் செய்து முடிக்கவும்; எங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேனோ, அந்த நினைப்பு வந்த மறுகணமே அங்கு தடையின்றிச் செல்லவும் ஏற்ற, ஒரு நல்ல துணையாக இருக்கக்கூடிய ஆற்றல்மிக்க நன்மனதை எனக்குப் பெரும் கருணையோடு நீ வழங்கினாய். நன்மைகள் பல அருளும் சிவபெருமானே! சுதந்திரமாகச் செயல்படும் இந்த மனதை, நீ அளித்த மாபெரும் பாக்கியமாக நான் பெற்றேன்.

Grammar & prosody

இப்பாடல் வெண்பாவிற்கு உரிய தளைகள் எங்கும் பிழையாமலும், நான்கு அடிகளிலும் மற்றும் தனிச்சொல்லிலும் 'ற்' என்னும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரும்படி சிறப்பான எதுகையுடனும், ஈற்றுச்சீர் 'பேறு' (காசு) என்னும் வாய்பாட்டிலும் துல்லியமாக எழுதப்பட்டுள்ளது
— No ratings yet
Your rating:

Comments

No comments yet. Be the first.

Leave a comment

Optional. Never shown publicly.

Related

Shiva Venbas

செய்ந்நன்றி - 10

தொழில்வளப் பேறு

கற்ற தொழிலை விருப்புடனே நாஞ்செய்ய உற்ற பெரும்பொருள் ஓங்கியதே; - நற்றவத்தால் குற்ற மிலாது குறையின்றி வாழவே பெற்றேனே நற்சிவனே பேறு.
19 August 2026 15

Same collection

Shiva Venbas

செய்ந்நன்றி - 8

உடன்பிறப்புப் பேறு

செற்றலரை அண்டவிடார்; சேர்ந்ததொரு துன்பத்தில் உற்ற துணையாகி யுள்ளன்பால் முன்நிற்பார்; - நற்றவத்தால் சுற்றமாய் நின்ற உடன்பிறப்பை நற்றுணையாப் பெற்றேனே நற்சிவனே பேறு.
14 August 2026 17

Same collection

Shiva Venbas

செய்ந்நன்றி - 7

மேன்மக்கள் குருவருள்

உற்ற உலகறிவை ஏற்றம்போல் கற்பித்து முற்றுமாய் வாழும் பொழுதெல்லாம் - நற்றுணையாய் உற்று வழிகாட்டும் மேன்மக்கள் நற்குருவைப் பெற்றேனே நற்சிவனே பேறு.
14 August 2026 17

Same collection