சித்தப்பித்தன்
9 August 2026
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி
பாதி உமையாளோடும் பங்கினனாய் — வேதியனாய்
நெற்றிக்கண் காட்டி வினைதீர்க்கும் ஈசனைநாம்
பற்றிடவே தீரும் பிணி.
Click any word to see its meaning.
Short meaning
தொடக்கமும் முடிவும் இல்லாத பேரொளியாய் விளங்குபவன் சிவன். தன் உடலின் ஒரு பாதியை உமாதேவிக்கு அளித்தவன். நெற்றிக்கண்ணைத் திறந்து நம் வினைகளை நீக்கும் அந்த ஈசனை நாம் பற்றிக்கொண்டால், நம் வாழ்வில் உள்ள பிறவிப் பிணிகள் அனைத்தும் நீங்கிவிடும்.
—
Your rating:
This verse online
Related
Shiva Venbas
சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள்
சித்தம் சிவமாக்கிச் செப்பிடுமிந் நூல்தழைக்க
நித்தமும் நமச்சி வாயநம - வித்தகமாய்ப்
பித்தன் எனநின்று பேரின்பம் ஈந்துலகை
உய்த்திடுவான் தாளே துணை.
Same verse form
Shiva Venbas
சிவ-சீவ ஐக்கியம் : ஆதி நிலை - 1
அப்பன் சிவனருளால் ஆவனயாம் எவ்வுயிரும்
செப்பரிய சோதித் திருவுருவே - செப்பினால்
அவனன்றி நானில்லை நானின்றி ஈசன்
புவனத்தில் இல்லை புரிந்து.
Same verse form
Shiva Venbas
திருவருள் வெண்பா
தீமை யழித்துச் செழுஞ்சமூ கங்காக்கும்
தூயவடி வீசன் துணையாவான் — நேர்மையுடன்
எந்நாளும் நல்வாழ்வு ஈந்தருளும் எம்பெருமான்
பொன்னார் கழலே புகல்.
Same verse form
Comments
No comments yet. Be the first.