சித்தப்பித்தன்
11 August 2026
நகர்த்தும் கைகளில்
நடுங்கும் காய்கள்;
மேடையின் விதிகளோ
முடிவற்ற நுணுக்கங்கள்!
வெற்றி தோல்வி என்பன
வெறும் கணக்கீடுகள்;
நிஜமான விளையாட்டு
திரைக்குப் பின்னே நடக்கும்
நிழல்களின் கூத்து!
ஆடுபவன் மறந்தே போகிறான்
தானும் ஒரு காயென!
ஆட்டம் முடிந்து
திரை விலகும் போது
அறியும் உண்மையை,
எவரும் வெல்லவில்லை என்று!
எல்லாம் தெரிந்தே
ஏமாறும் விந்தை;
விதி விளையாடும்
இந்த
ஆட்டத்தின் ஆட்டம்!
சுழியில்...
Click any word to see its meaning.
—
Your rating:
This verse online
Related
Kavithaigal
அர்த்தமற்ற கவிதைகள்
சொற்களின் கோர்வையில்
சிக்காத ஒரு வெறுமை,
பொருட்களின் தேடலில்
சிதைந்து போகும் வரிகள்.
Same collection
Kavithaigal
கோரத்தின் அழகு
வெளியில் முற்றிய அழகை,
ஒழுங்கே பெற்றிருந்தாலும்...
அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும்
அகோர மனம்!
Same collection
Kavithaigal
நிழலின் பிம்பம்
எனதென்பதை இழந்த நொடியில்
நிஜம் தொலைத்த நிழலாய்!
சூரியன் தகிக்கும் வேளையில்,
தொடர்ந்த நீண்ட நிழல்...
Same collection
Comments
No comments yet. Be the first.