சித்தப்பித்தன்
11 ஆகஸ்ட் 2026
கன்னங்களின் சிவப்பில்
காதல் பூக்கும் வசந்தம்;
சொல்லத் துடிக்கும் வார்த்தை
நாக்கின் நுனியில் முட்டி,
மீண்டும் மௌனமாய் வடியும்!
பார்வை படரும் இடங்களில்
பதற்றத்தின் நடுக்கம்;
எதிர்பார்ப்பின் நிழலில்
ஒளிந்து கொள்ளும் அகந்தை!
உடலெங்கும் படர்ந்திருக்கும்
மின்னல் கீற்றின் ஜாலம்,
சொல்லித் தீராத ஏதோவொன்று
சொல்லில் சிக்காமல் திணறும்!
ஆயிரம் பேசிப் பழகினாலும்
அருகில் வந்ததும் மறக்கும்
அந்தத் தேன் துளி!
நடுக்கத்தின் விளிம்பில்
நிமிர்ந்து பார்க்கும்...
இந்த
வெட்கத்தின் கூச்சம்!
விழிகளில்...
எந்தச் சொல்லையும் சொடுக்கினால் அதன் பொருள் தோன்றும்.
—
உங்கள் மதிப்பீடு:
இந்தச் செய்யுளை இணையத்தில் காண
தொடர்புடையவை
கவிதைகள்
அர்த்தமற்ற கவிதைகள்
சொற்களின் கோர்வையில்
சிக்காத ஒரு வெறுமை,
பொருட்களின் தேடலில்
சிதைந்து போகும் வரிகள்.
அதே தொகுப்பு
கவிதைகள்
கோரத்தின் அழகு
வெளியில் முற்றிய அழகை,
ஒழுங்கே பெற்றிருந்தாலும்...
அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும்
அகோர மனம்!
அதே தொகுப்பு
கவிதைகள்
நிழலின் பிம்பம்
எனதென்பதை இழந்த நொடியில்
நிஜம் தொலைத்த நிழலாய்!
சூரியன் தகிக்கும் வேளையில்,
தொடர்ந்த நீண்ட நிழல்...
அதே தொகுப்பு
கருத்துகள்
இன்னும் கருத்து எதுவும் இல்லை. முதல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும்.