Seynandri Muzhakkam 3 / 108

செய்ந்நன்றி - 3

இறையருள் அரண்

14 August 2026 சித்தப்பித்தன் 14 views

My shelf →

Random piece
இல்லமும் நானும் இனிதாக வாழ்வதற்குப் நல்லருளை ஈந்தாய் அரனே! - அகிலத்தில் அல்லல்கள் தீர்க்கும் அரணாகி நின்றதனால் வெல்லும் பெருங்காவல் பேறு.

Click any word to see its meaning.

Short meaning

சிவபெருமானே! நானும் என் குடும்பமும் (இல்லமும்) எந்தக் குறையுமின்றி இனிமையாக வாழ்வதற்காக உன்னுடைய நல்லருளை எங்களுக்கு வழங்கினாய். இந்த உலகத்தில் எங்களது துன்பங்களை எல்லாம் தீர்த்து எங்களைக் காக்கும் பாதுகாப்பு அரணாக நீயே எப்போதும் உடனிருப்பதால், எல்லாத் தடைகளையும் வென்று நலம்தரும் உனது மாபெரும் பாதுகாப்பைப் பெறும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது

Grammar & prosody

இப்பாடல் வெண்பாவிற்கான இலக்கண விதிகளின்படி 'மாமுன் நிரை, விளமுன் நேர், காய்முன் நேர்' ஆகிய தளைகள் தப்பாமலும், நான்கு அடிகளிலும் 'ல்' என்ற இரண்டாம் எழுத்து ஒன்றிவரும்படி 'எதுகை' அமையுமாறும், ஈற்றுச்சீர் 'காசு' என்னும் வாய்பாட்டிலும் எழுதப்பட்டுள்ளது.
— No ratings yet
Your rating:

Comments

No comments yet. Be the first.

Leave a comment

Optional. Never shown publicly.

Related

Shiva Venbas

செய்ந்நன்றி - 10

தொழில்வளப் பேறு

கற்ற தொழிலை விருப்புடனே நாஞ்செய்ய உற்ற பெரும்பொருள் ஓங்கியதே; - நற்றவத்தால் குற்ற மிலாது குறையின்றி வாழவே பெற்றேனே நற்சிவனே பேறு.
19 August 2026 11

Same collection

Shiva Venbas

செய்ந்நன்றி - 9

எண்ணியாங்கு எய்தும் வரம்

உற்ற நினைவெல்லாம் உன்னதமாய்ச் செய்திடவும் சுற்ற நினைத்த பொழுதினில் ஏகவும் - நற்றுணையாய்ப் பெற்றதொரு நன்மனத்தைப் பேரருளாய் எந்நாளும் பெற்றேனே நற்சிவனே பேறு.
19 August 2026 11

Same collection

Shiva Venbas

செய்ந்நன்றி - 8

உடன்பிறப்புப் பேறு

செற்றலரை அண்டவிடார்; சேர்ந்ததொரு துன்பத்தில் உற்ற துணையாகி யுள்ளன்பால் முன்நிற்பார்; - நற்றவத்தால் சுற்றமாய் நின்ற உடன்பிறப்பை நற்றுணையாப் பெற்றேனே நற்சிவனே பேறு.
14 August 2026 15

Same collection