சித்தப்பித்தன்
10 ஆகஸ்ட் 2026
மகிழ்வுஆய்க் கருப்பை மகவைச் சுமக்கா
இகழ்வில் விழிநீர் இதுவே - தகுதியாய்ப்
பத்தாம் திங்களில் பச்சிளஞ் சேய்தர
சுத்தமாய் ஆக்கும் செயல்.
எந்தச் சொல்லையும் சொடுக்கினால் அதன் பொருள் தோன்றும்.
பொழிப்புரை
இந்தக் குறிப்பிட்ட மாதத்தில் கருப்பையானது ஒரு குழந்தையைச் சுமக்கவில்லை என்றால், அதன் ஏக்கத்தால் வெளிப்படும் கண்ணீரே இந்த உதிரப்போக்கு (இதை இகழக் கூடாது). அடுத்த முறை, பத்தாம் மாதத்தில் ஒரு பச்சிளம் குழந்தையைப் பெற்றுத் தர, தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் இயற்கைச் செயலே இது.
—
உங்கள் மதிப்பீடு:
இந்தச் செய்யுளை இணையத்தில் காண
தொடர்புடையவை
வெண்பா
செந்நீர் மாண்பு
திங்கள் சுழற்சியில் செந்நீர் வெளிவரல்
மங்கையர் தேகத்து மாண்பாகும் - துங்க
உயிர்களை மண்ணில் உதிக்கவே செய்யும்
செயலது விந்தையின் சீர்.
அதே தொகுப்பு
வெண்பா
கருவாக்கும் குருதி
சீர்ஆன பூப்பைத் தீட்டென்று சொல்லியே
ஊரார் ஒதுக்குதல் ஊனமே - நேராக
மண்ணில் மழலை மலரக் கருவாகும்
பெண்ணின் உதிரம் பெருமை.
அதே தொகுப்பு
வெண்பா
மலைநிகர் மங்கை
பெருமைக் குரிய பெருநிகழ்வால் நெஞ்சில்
உருவாகும் சோர்வை உடைப்பாள் - தருமமிகு
வலியினைத் தாங்கி மலையென நிற்பாள்
பொலிவோடு பெண்ணவள் பார்.
அதே தொகுப்பு
கருத்துகள்
இன்னும் கருத்து எதுவும் இல்லை. முதல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும்.