சித்தப்பித்தன்
11 ஆகஸ்ட் 2026
காதுகளைப் பிளக்கும்
கண்ணீரின் பெருஞ்சத்தம்.
எவரும் கேட்கவியலாத
உள்ளத்தின் அழுகுரல்.
வார்த்தைகளால் முடியாத
வலிகளின் பேரோசை,
தனிமையின் இருளறையில்
ஓயாமல் எதிரொலிக்கும்
நினைவுகளின் சலசலப்பு.
உதடுகள் இறுகப் பூட்டிக்கொள்ள,
உயிர் கத்திக்கொண்டிருக்கும்
உருவமில்லாப் பேரிரைச்சல்!
கேட்பவருக்கோ பேரமைதி,
சுமப்பவருக்குப் வேள்வித்தீ!
இந்த
மௌனத்தின் சத்தம்..!
கண்ணீரில்...
எந்தச் சொல்லையும் சொடுக்கினால் அதன் பொருள் தோன்றும்.
—
உங்கள் மதிப்பீடு:
இந்தச் செய்யுளை இணையத்தில் காண
தொடர்புடையவை
கவிதைகள்
அர்த்தமற்ற கவிதைகள்
சொற்களின் கோர்வையில்
சிக்காத ஒரு வெறுமை,
பொருட்களின் தேடலில்
சிதைந்து போகும் வரிகள்.
அதே தொகுப்பு
கவிதைகள்
கோரத்தின் அழகு
வெளியில் முற்றிய அழகை,
ஒழுங்கே பெற்றிருந்தாலும்...
அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும்
அகோர மனம்!
அதே தொகுப்பு
கவிதைகள்
நிழலின் பிம்பம்
எனதென்பதை இழந்த நொடியில்
நிஜம் தொலைத்த நிழலாய்!
சூரியன் தகிக்கும் வேளையில்,
தொடர்ந்த நீண்ட நிழல்...
அதே தொகுப்பு
கருத்துகள்
இன்னும் கருத்து எதுவும் இல்லை. முதல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும்.