சித்தப்பித்தன்
11 ஆகஸ்ட் 2026
என்றும் மாறாமல்
நிலைத்து வாழ்வது
மரணம் மட்டுமே!
நம்மால் அழிக்கவும், கடந்து போகவும்,
உயிர்ப்பிக்கவும் முடியாது;
எதிர்கொண்டே ஆக வேண்டும்!
மரணம் தன் கணக்கைத் தொடங்கி
நம்மை உயிர்ப்பிக்கும் அந்த நொடியில்,
இவ்வுலகில் நாம் இருப்பதில்லை.
நாம் வாழும் வாழ்வைக் கண்டு
மரணமே நம்மை எண்ணி ஏங்கிட!
தான் உயிர்த்தெழும் போதெல்லாம்
நம்மிடம் அது மண்டியிட!
அதற்காய்...
அலைபாயும் ஆன்மாவிற்கு
உள்ளிருக்கும் உயிருக்காய்,
உடலை நாம் போற்றி!
வாழ்ந்து முடிக்க கிடைக்குமே
இந்த
மரணத்தில் வாழ்வு!
உடல்வலிமையில்...
எந்தச் சொல்லையும் சொடுக்கினால் அதன் பொருள் தோன்றும்.
—
உங்கள் மதிப்பீடு:
இந்தச் செய்யுளை இணையத்தில் காண
தொடர்புடையவை
கவிதைகள்
அர்த்தமற்ற கவிதைகள்
சொற்களின் கோர்வையில்
சிக்காத ஒரு வெறுமை,
பொருட்களின் தேடலில்
சிதைந்து போகும் வரிகள்.
அதே தொகுப்பு
கவிதைகள்
கோரத்தின் அழகு
வெளியில் முற்றிய அழகை,
ஒழுங்கே பெற்றிருந்தாலும்...
அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும்
அகோர மனம்!
அதே தொகுப்பு
கவிதைகள்
நிழலின் பிம்பம்
எனதென்பதை இழந்த நொடியில்
நிஜம் தொலைத்த நிழலாய்!
சூரியன் தகிக்கும் வேளையில்,
தொடர்ந்த நீண்ட நிழல்...
அதே தொகுப்பு
கருத்துகள்
இன்னும் கருத்து எதுவும் இல்லை. முதல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும்.