சித்தப்பித்தன்
11 August 2026
எனதென்பதை இழந்த நொடியில்
நிஜம் தொலைத்த நிழலாய்!
சூரியன் தகிக்கும் வேளையில்,
தொடர்ந்த நீண்ட நிழல்...
கருநிழலாக வெளிச்சத்தில்
என்னைத் தொலைத்த பின்னும்,
இல்லாத ஒன்றை
எதைக் கொண்டு நிலைநாட்ட?
பகலவனால் வீசி எறியப்பட்ட
நிழலைத் தத்தெடுத்த - அந்தப்
பௌர்ணமியும் அறியாத மாயம்!
இடத்திற்கு ஏற்றாற்போல் மாறும்
நிழலும் நிஜத்தின் உருவமா?
அல்லது... ஒளியைத் தடுக்கும்
என் அகத்தின் அகந்தையா?
வெளிச்சத்தில் தெரிவது வெறும் இருட்டல்ல;
நான் சுமக்கும் சுமை, நான் மறைக்கும் ரகசியம்,
நான் அடையத் துடிக்கும் என் அந்தரங்கத்தின் நீட்சி!
எத்தனை கோணங்களில் பார்த்தாலும்,
தன்னால் தன்னை உணர முடியாத...
இந்த
நிழலின் பிம்பம்!
ஒளியிலே...
Click any word to see its meaning.
—
Your rating:
This verse online
Related
Kavithaigal
அர்த்தமற்ற கவிதைகள்
சொற்களின் கோர்வையில்
சிக்காத ஒரு வெறுமை,
பொருட்களின் தேடலில்
சிதைந்து போகும் வரிகள்.
Same collection
Kavithaigal
கோரத்தின் அழகு
வெளியில் முற்றிய அழகை,
ஒழுங்கே பெற்றிருந்தாலும்...
அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும்
அகோர மனம்!
Same collection
Kavithaigal
விபத்தின் திட்டம்
எதிர்பாராத அதற்கு
சான்றோர் இட்டபெயர்
காலத்தின் சுழற்சியில்
வரையறுக்கப்பட்ட
Same collection
Comments
No comments yet. Be the first.