சித்தப்பித்தன்
14 August 2026
கற்றல் சிறக்கக் கவினார் தொடர்கல்வி
பற்றாகத் தந்தாய் பரமனே! - நற்றவத்தால்
பெற்றேன் பெருமையைப் பேரின்ப மாகவே
பெற்றேனே பேறாய்ச் சிவனே.
Click any word to see its meaning.
Short meaning
என்னுடைய கற்றல் மேன்மேலும் சிறந்து விளங்குவதற்காக, அழகுமிக்க தொடர் கல்வியினை எனக்குப் பற்றுக்கோடாகத் தந்தாய் பரமேஸ்வரா! நான் செய்த நல்ல தவத்தினால், இத்தொடர் கல்வியால் வந்த பெருமையைப் பேரின்பமாகவே உணர்கிறேன். சிவனே! இதனை என் வாழ்வின் மாபெரும் பாக்கியமாக நான் பெற்றேன்.
Grammar & prosody
இப்பாடல் வெண்பாவிற்கு உரிய மாமுன் நிரை, விளமுன் நேர், காய்முன் நேர் என்னும் தளைகள் தப்பாமலும், நான்கு அடிகளிலும் 'ற்' என்னும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரும்படி சிறப்பான எதுகை அமையுமாறும், ஈற்றுச்சீர் 'பிறப்பு' என்னும் வாய்பாட்டிலும் எழுதப்பட்டுள்ளது
—
Your rating:
This verse online
Related
Shiva Venbas
செய்ந்நன்றி - 10
தொழில்வளப் பேறு
கற்ற தொழிலை விருப்புடனே நாஞ்செய்ய
உற்ற பெரும்பொருள் ஓங்கியதே; - நற்றவத்தால்
குற்ற மிலாது குறையின்றி வாழவே
பெற்றேனே நற்சிவனே பேறு.
Same collection
Shiva Venbas
செய்ந்நன்றி - 9
எண்ணியாங்கு எய்தும் வரம்
உற்ற நினைவெல்லாம் உன்னதமாய்ச் செய்திடவும்
சுற்ற நினைத்த பொழுதினில் ஏகவும் - நற்றுணையாய்ப்
பெற்றதொரு நன்மனத்தைப் பேரருளாய் எந்நாளும்
பெற்றேனே நற்சிவனே பேறு.
Same collection
Shiva Venbas
செய்ந்நன்றி - 8
உடன்பிறப்புப் பேறு
செற்றலரை அண்டவிடார்; சேர்ந்ததொரு துன்பத்தில்
உற்ற துணையாகி யுள்ளன்பால் முன்நிற்பார்; - நற்றவத்தால்
சுற்றமாய் நின்ற உடன்பிறப்பை நற்றுணையாப்
பெற்றேனே நற்சிவனே பேறு.
Same collection
Comments
No comments yet. Be the first.