சித்தப்பித்தன்
14 August 2026
மானிடமாய் இம்மா நிலத்தில் பிறப்பெடுத்து
தேனிசனைப் போற்றும் வரம்பெற்றேன் - ஊனில்
உருகி உமையாளன் சேவடியை நாளும்
தொழுதேத்த வாய்த்ததுவே பேறு.
Click any word to see its meaning.
Short meaning
அரிய மனிதப் பிறவியை இந்த உலகத்தில் பெற்று, தேன் போன்ற இன்பம் தரும் ஈசனைப் போற்றித் துதிக்கும் நல்வரத்தைப் பெற்றேன். உடலிலும் உயிரிலும் அன்பினால் உருகி, உமையொருபாகனின் பொன்னார் திருவடிகளை நாள்தோறும் தொழுது ஏத்துவதே எனக்குக் கிடைத்த இணையற்ற பெரும் பேறாகும்.
—
Your rating:
This verse online
Related
Shiva Venbas
செய்ந்நன்றி - 10
தொழில்வளப் பேறு
கற்ற தொழிலை விருப்புடனே நாஞ்செய்ய
உற்ற பெரும்பொருள் ஓங்கியதே; - நற்றவத்தால்
குற்ற மிலாது குறையின்றி வாழவே
பெற்றேனே நற்சிவனே பேறு.
Same collection
Shiva Venbas
செய்ந்நன்றி - 9
எண்ணியாங்கு எய்தும் வரம்
உற்ற நினைவெல்லாம் உன்னதமாய்ச் செய்திடவும்
சுற்ற நினைத்த பொழுதினில் ஏகவும் - நற்றுணையாய்ப்
பெற்றதொரு நன்மனத்தைப் பேரருளாய் எந்நாளும்
பெற்றேனே நற்சிவனே பேறு.
Same collection
Shiva Venbas
செய்ந்நன்றி - 8
உடன்பிறப்புப் பேறு
செற்றலரை அண்டவிடார்; சேர்ந்ததொரு துன்பத்தில்
உற்ற துணையாகி யுள்ளன்பால் முன்நிற்பார்; - நற்றவத்தால்
சுற்றமாய் நின்ற உடன்பிறப்பை நற்றுணையாப்
பெற்றேனே நற்சிவனே பேறு.
Same collection
Comments
No comments yet. Be the first.