All pieces

85 results

  1. செய்ந்நன்றி - 10 கற்ற தொழிலை விருப்புடனே நாஞ்செய்ய உற்ற பெரும்பொருள் ஓங்கியதே; - நற்றவத்தால் குற்ற மிலாது குறையின்றி வாழவே பெற்றேனே நற்சிவனே பேறு.
  2. செய்ந்நன்றி - 9 உற்ற நினைவெல்லாம் உன்னதமாய்ச் செய்திடவும் சுற்ற நினைத்த பொழுதினில் ஏகவும் - நற்றுணையாய்ப் பெற்றதொரு நன்மனத்தைப் பேரருளாய் எந்நாளும் பெற்றேனே நற்சிவனே பேறு.
  3. செய்ந்நன்றி - 8 செற்றலரை அண்டவிடார்; சேர்ந்ததொரு துன்பத்தில் உற்ற துணையாகி யுள்ளன்பால் முன்நிற்பார்; - நற்றவத்தால் சுற்றமாய் நின்ற உடன்பிறப்பை நற்றுணையாப் பெற்றேனே நற்சிவனே பேறு.
  4. செய்ந்நன்றி - 7 உற்ற உலகறிவை ஏற்றம்போல் கற்பித்து முற்றுமாய் வாழும் பொழுதெல்லாம் - நற்றுணையாய் உற்று வழிகாட்டும் மேன்மக்கள் நற்குருவைப் பெற்றேனே நற்சிவனே பேறு.
  5. செய்ந்நன்றி - 6 உற்ற உடல்நலமும் ஊர்போற்றும் சிந்தனையும் குற்றமிலா நற்குணமும் கொண்டிலங்க; - நற்றவத்தால் கற்றறிந்து மேலோங்கும் கண்ணிய நன்மக்களைப் பெற்றேனே நற்சிவனே பேறு
  6. செய்ந்நன்றி - 5 ஆற்றும் அரவணைப்பை அன்பாக எந்நாளும் ஊற்றும் உயிரன்பால் ஓங்கி வளர்த்தார்; - பெருமையாய்ப் போற்றும் தகுதியுள்ள பெற்றோரைப் பெற்றேன் சிவனே அளித்தாய் சிறந்து.
  7. செய்ந்நன்றி - 4 கற்றல் சிறக்கக் கவினார் தொடர்கல்வி பற்றாகத் தந்தாய் பரமனே! - நற்றவத்தால் பெற்றேன் பெருமையைப் பேரின்ப மாகவே பெற்றேனே பேறாய்ச் சிவனே.
  8. செய்ந்நன்றி - 3 இல்லமும் நானும் இனிதாக வாழ்வதற்குப் நல்லருளை ஈந்தாய் அரனே! - அகிலத்தில் அல்லல்கள் தீர்க்கும் அரணாகி நின்றதனால் வெல்லும் பெருங்காவல் பேறு.
  9. செய்ந்நன்றி - 2 ஊன மிலாத உடலளித்தாய்; உய்வதற்கு ஊன மிலாத உளமளித்தாய்; - தேனார் சிவனே உனைப்போற்றும் சீரிய பேற்றை வரமே அளித்தாய் மகிழ்ந்து.
  10. செய்ந்நன்றி - 1 மானிடமாய் இம்மா நிலத்தில் பிறப்பெடுத்து தேனிசனைப் போற்றும் வரம்பெற்றேன் - ஊனில் உருகி உமையாளன் சேவடியை நாளும் தொழுதேத்த வாய்த்ததுவே பேறு.
  11. சிவ-சீவ ஐக்கியம் : ஆதி நிலை - 1 அப்பன் சிவனருளால் ஆவனயாம் எவ்வுயிரும் செப்பரிய சோதித் திருவுருவே - செப்பினால் அவனன்றி நானில்லை நானின்றி ஈசன் புவனத்தில் இல்லை புரிந்து.
  12. சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள் சித்தம் சிவமாக்கிச் செப்பிடுமிந் நூல்தழைக்க நித்தமும் நமச்சி வாயநம - வித்தகமாய்ப் பித்தன் எனநின்று பேரின்பம் ஈந்துலகை உய்த்திடுவான் தாளே துணை.
  13. வாடிக்கையின் வேடிக்கை இயந்திரத் தாளமிடும் தினசரிச் சுழற்சி; நேற்றைய விடியலின் அதே தொடர்ச்சி!
  14. வெட்கத்தின் கூச்சம் கன்னங்களின் சிவப்பில் காதல் பூக்கும் வசந்தம்; சொல்லத் துடிக்கும் வார்த்தை நாக்கின் நுனியில் முட்டி,
  15. சொற்களின் பற்கள் மென்மையாகத் தீண்டினாலும் வலியெடுக்கும் வன்மம், இதழ்களின் மறைவில் ஒளிந்திருக்கும் கூர்மை!
  16. குழலின் புயல் மென்மையான இசையின் மறைவில் ஒளிந்திருக்கும் மௌனத்தின் பேரிரைச்சல்!  
  17. அகத்தின் புறம் வெளியே தெரியும் பிம்பம், உள்ளே உறையும் நிழலின் ஒற்றைப் பிரதிபலிப்பு!  
  18. ஆட்டத்தின் ஆட்டம் நகர்த்தும் கைகளில் நடுங்கும் காய்கள்; மேடையின் விதிகளோ முடிவற்ற நுணுக்கங்கள்!
  19. புதிரின் புதிர் விடை காண முயலும் விசித்திரமான வேட்கை; ஒவ்வொரு விடைக்குள்ளும் ஒளிந்திருக்கும் புதிய கேள்வி!
  20. கல்வியில் கேள்வி புத்தகப் பக்கங்களில் புதைந்து கிடக்கும் விடை; கேள்வி கேட்கும் அறிவோ கேள்வியாய் நின்று தவிக்கும்!
  21. பக்தியின் முக்தி வெளிப்புறச் சடங்கின் வெற்றுப் படலங்கள் விலக, உள்ளே உறையும் உண்மையின் தரிசனம்!
  22. உளியின் வலி கல்லை உடைக்கும் போது அறிவதில்லை பாறை; உளியின் ஒவ்வொரு அடிக்கும் பின்னே, உருவாகும் தெய்வத்தின் விளிம்பு!
  23. சிந்தனை துகள் கடல் முழுவதையும் கண்ணாடிக்கு அடியில் சிறைவைக்க முயலும் அற்பத்தனமான ஆசை!  
  24. அறத்தின் ஆற்றல் அநீதியின் புயல் வீசும் அனல் மிகுந்த காலத்திலும், அசையாது நின்றிருக்கும் அறத்தின் மெல்லிய வேர்!
  25. ஆடாத ஆட்டம் எல்லைகள் இல்லா இந்த மேடையில், எவருமறியா திரைக்குப் பின் எழுந்திருக்கும் வெறி!
  26. வியக்கும் விந்தை அதிசயங்கள் யாவும் அருகில் இருந்தும், அறியாமல் தேடும் அகத்தின் அசட்டுத்தனம்!
  27. திசை மாற்றம் திட்டமிட்ட பாதைகள் திசை மாறிப் போக, திசையற்ற வெளியில் தத்தளிக்கும் ஒரு பயணம்!
  28. மாலை மாற்று ஆதியும் அந்தமும் ஒன்றாய் இணையும், காலத்தின் இருபுறக் கண்ணாடிப் பிம்பம்!
  29. முற்றிலும் முற்றும் தொடங்கிய யாவும் தொலைந்து போகும், தொடுவானம் தொட்டபின் தோன்றும் சூனியம்!
  30. உலகின் மாயம் கண்ணுக்குள் பிம்பங்கள், கண்டே ஏமாறும் கானல் நீரின் ஆட்டம்!  
  31. இயக்கத்தின் ஓய்வு சுழலும் பிரபஞ்சத்தின் சுவடு படியாத அணுவின் துடிப்பு! இடைவிடாது ஓடும் காலத்தின் இடையில் ஒரு கணத்துத் துளி.
  32. தேடலின் இழப்பு கிடைத்தவை யாவும் நழுவ, தேடித் தேடி அலையும் தீராத அலைச்சலின் முடிவு!  
  33. விபத்தின் திட்டம் எதிர்பாராத அதற்கு சான்றோர் இட்டபெயர் காலத்தின் சுழற்சியில் வரையறுக்கப்பட்ட
  34. நிழலின் பிம்பம் எனதென்பதை இழந்த நொடியில் நிஜம் தொலைத்த நிழலாய்! சூரியன் தகிக்கும் வேளையில், தொடர்ந்த நீண்ட நிழல்...
  35. கோரத்தின் அழகு வெளியில் முற்றிய அழகை, ஒழுங்கே பெற்றிருந்தாலும்... அகத்தினுள் சிதிலமடைந்து கிடக்கும் அகோர மனம்!
  36. அர்த்தமற்ற கவிதைகள் சொற்களின் கோர்வையில் சிக்காத ஒரு வெறுமை, பொருட்களின் தேடலில் சிதைந்து போகும் வரிகள்.
  37. கனவுக்குள் தூக்கம் விழித்திருக்கும் உலகை துறந்த, மாயம் நிறைந்ததொரு பெருங்கனவு.  
  38. காலத்தின் முடக்கம் நொடிகள் நகர மறுத்து, நிமிடங்கள் உறைந்துபோக, செயலிழந்து நிற்கும் ஒரு விசித்திரப் பொழுது.
  39. மரணத்தில் வாழ்வு என்றும் மாறாமல் நிலைத்து வாழ்வது மரணம் மட்டுமே!  
  40. வீழ்ச்சியின் எழுச்சி வானளவு நிற்கும் மாமலையில், சிகரம் தொட்டுத் தொடங்கி. துள்ளிக் குதித்து, தரை தொடத் துடிக்கும்
  41. சுவடில்லா தடம் மண்ணில் பதியாத பாதங்கள், மனதில் மட்டும் ஆழமாய் அழுத்திய நினைவுகள்.  
  42. அழுகையின் சிரிப்பு கண்ணீர்த் துளிகளை கண்களுக்குள் சிறைவைத்து, உதடுகளில் கட்டாயமாய் பூக்க வைக்கும் பொய்நகை.
  43. மௌனத்தின் சத்தம் காதுகளைப் பிளக்கும் கண்ணீரின் பெருஞ்சத்தம். எவரும் கேட்கவியலாத உள்ளத்தின் அழுகுரல்.
  44. அனைத்தும் சிவமே வெண்பா அண்டம் அனைத்தும் ஈசன் வடிவாகும்; கண்ட பொருளும் அரனார் அருளாகும்; - அன்பர்க்கு எங்கும் சிவமே எனவுணரும் மெய்ஞானம் பொங்கும் அருளே உறும்.
  45. திருவருள் வெண்பா தீமை யழித்துச் செழுஞ்சமூ கங்காக்கும் தூயவடி வீசன் துணையாவான் — நேர்மையுடன் எந்நாளும் நல்வாழ்வு ஈந்தருளும் எம்பெருமான் பொன்னார் கழலே புகல்.
  46. சிவன் வெற்றி வெண்பா ஆல முண்டான் அடியாரைக் காத்திடவே காலனை யுதைத்துக் காய்ந்தானே — ஞாலத்து வெற்றி வடிவேலன் தந்தை விறல்சிவன் நற்றாள் தொழநமக் குண்டு.
  47. அறமெனும் பூப்பு திறம்பாடுங் காருண்யப் பூப்பினை யென்றும் அறம்போல் அகத்தில் அறிவோம் - நிறம்வாழப் பெண்ணாய் உதித்த பெருமையைப் போற்றிடவே மண்ணில் மிளிரும் வியப்பு.
  48. உணர்வுகளின் ஊசல் சிறப்புஆய்ப் பாயும் குருதியின் வேகத்தால் உறைந்த உணர்வுகள் ஊசலாம் - குறைவின்றி கள்ளமில் லாப்பெண்ணைக் கனிவாகக் காப்பதே தெள்ளிய மாந்தர் திறம்.
  49. பிறப்பின் மூலம் என்பார் பெரியோர் இதுபுனித இரத்தமென்று அன்பால் அகிலம் அகமகிழ - முன்பே பிறப்பிற்கும் மூலப் பெருமை இதுவே சிறப்பாய்ப் போற்றுதல் சிறப்பு.
  50. படைப்பின் இறைவி செயல்ஆல் உலகைச் செழிக்கவே செய்யும் இயற்கையின் அற்புதம் இஃதே - மயக்கத்தால் கல்லா மூடரைக் கடிந்தொதுக் கிப்புவியே எல்லாம் இறைவி என்பார்.