அனைத்துப் படைப்புகள்

85 முடிவுகள்

  1. திண்மனம் (மன உறுதி) இடுக்கண் வருங்கால் இடர்நீக்கும் திண்மை நடுக்கமில் உள்ளம் நலம்சேர் - கொடுக்கின்ற திண்மனமே வாழ்வின் திருவாம் எனைத்தும் விண்மணக்கும் வெற்றியைத் தரும்.
  2. நற்பெயர் (பெருமை) ஒழுக்கம் உடைமை உயர்குலமாம் என்றும் வழுவா நற்பெயரே வாழ்வாம் - விழுமிய சீரே பெருமை திருந்தும் உலகினில் பேரே புகழாய்ப் பெரும்.
  3. புகழ் (கீர்த்தி) திக்கெட்டும் போற்றும் திருவார் புகழுண்டேல் எக்காலும் அழியா இளமையாம் - தக்கார் நலம்வாழச் செய்யும் நறுமணம் போலப் புலவர் புகழும் புகழ்.
  4. 16 செல்வங்கள் துணிவுகல்வி ஆயுள்அடல் தோய்ந்தபுகழ் கீர்த்தி அணியிளமை திண்மனம்நேர் அத்தம் - மணிதானியம் அழகுநன் மக்கள்வெற்றி நல்விதிபொன் இன்பம் பதினாறு பேறும் பெறு.
  5. தோழமைத் துணையாக சிவன் நெஞ்சில் குடிபுகுந்த நேசத் தனித்துணையே அஞ்சல் எனவபயம் தந்துமே—நெஞ்சாரக் கண்போல் எனைக்வாழ்த்திக் காக்குமே எப்போதும் நண்பனாம் ஈசன் நமக்கு!
  6. தமிழ்ப் பித்தன் சித்தன்யான் தமிழ்ப்பற் றாலே பித்தநான் இப்புவிக்கே அத்தன் அருளால்புண்ணி யப்பன் - வழியான் நித்தமும் என்னுயிரால் என்றும் வினையாற்ற சித்தமாய் வந்திப்பேன் இன்று.
  7. சிவசரணாகதி அப்பனே சிவனேஎன் ஆருயிர் நாதனே! அகிலத்தை ஆளுகின்ற அரசே யப்பா! எப்பொழுதும் என்சிந்தை எண்ணமும் செயல்களும்! எல்லாமும் நீயாக நின்றா யப்பா!
  8. சிவ வெண்பா **இருவினைத் தீயை இடறிக் களைந்து மருவினைத் தீர்க்கும் மதியாய் - ஒருநொடிக்குள் ஈசன் எனையிழுத்துத் தன்வசமாத் தந்திடுவான் வீசும்கருணை வியன்.**
  9. வாசிப்பின் அவசியம் அவைத் தலைமைக்கும், சான்றோர்களுக்கும், என் அருமை நண்பர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள்!     நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
  10. கண்ணாடி முன்னாடி என்னடி கண்ணாடி முன்னாடி என்னடி பண்ணொன்று நீர்கேட்க வந்தது கேளேன் நிழல்காட்டும் நிலையாடியின் சிறப்புமது மண்ணிலே கலந்த மாயப் பொருளினாய்
  11. அறியாமை நீங்குதல் நீல விடம்உண்ட நிர்மலனைக் காளத்தியான் ஆல நிழலமர்ந்த அண்ணலை — ஞாலத்து அன்போடு போற்றித் துதிப்பார்க்கு வல்வினைகள் முன்போல நில்லா முறிந்து.
  12. இறைவனின் பெருமை ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி பாதி உமையாளோடும் பங்கினனாய் — வேதியனாய் நெற்றிக்கண் காட்டி வினைதீர்க்கும் ஈசனைநாம் பற்றிடவே தீரும் பிணி.