Senneer Anthathi

உயிர்களை உருவாக்கும் இறைவி எனப் போற்றும் செந்நீர் அந்தாதி 12 வெண்பாக்கள்.

12 pieces

Read as a book

Introduction

On battlefields, the shedding of blood is a symbol of death; but within a woman's womb, it is the ultimate symbol of creation! This poetic cycle celebrates menstruation—long shunned by society as a 'taboo'—as the 'primal glory' that brings forth all life into this world. It is a grand endeavor that honors the natural monthly cycle of a woman's body using classical Tamil, brilliantly mirroring it through 'Anthadhi', a beautifully cyclical poetic form.
  1. 1 செந்நீர் மாண்பு திங்கள் சுழற்சியில் செந்நீர் வெளிவரல் மங்கையர் தேகத்து மாண்பாகும் - துங்க உயிர்களை மண்ணில் உதிக்கவே செய்யும் செயலது விந்தையின் சீர்.
  2. 2 கருவாக்கும் குருதி சீர்ஆன பூப்பைத் தீட்டென்று சொல்லியே ஊரார் ஒதுக்குதல் ஊனமே - நேராக மண்ணில் மழலை மலரக் கருவாகும் பெண்ணின் உதிரம் பெருமை.
  3. 3 மலைநிகர் மங்கை பெருமைக் குரிய பெருநிகழ்வால் நெஞ்சில் உருவாகும் சோர்வை உடைப்பாள் - தருமமிகு வலியினைத் தாங்கி மலையென நிற்பாள் பொலிவோடு பெண்ணவள் பார்.
  4. 4 திங்கள் சுழற்சி பார்இல் நிலவு பவனிவரு தல்போல நாரியும் திங்கள் நடைபெறுவாள் - சீராய் உடலைப்பு துப்பித்து உன்னதப் பேற்றை அடையத் தயாரா வாள்.
  5. 5 உயிர்ப்பயிர் உழத்தி ஆவாள் உயிரை அளிக்கும் உழத்தியாய் காவாய் கருப்பை கசிந்தொழுக - நாளும் உதிரத்தைப் பாய்ச்சி உயிர்ப்பயிரை ஏந்தும் மதுர நிலமவள் மாண்பு.
  6. 6 கனிவுறு காப்பு மாண்புடைய பெண்ணை மதித்துந் தினமுமே காண்போம் கனிவாய்க் கருணையால் - பூண்நிறைந்த பொன்னான தேகம் பொலிவுபெற ஓய்வினை அந்நாளில் ஈதல் அழகு.
  7. 7 பழமையிருள் களைதல் அழகுஆன மெய்ப்பாட்டை அஞ்சிக் குறைகூறும் பழமை இருளைப் பகர்வோம் - முழக்கமிட்டு கட்டுப் படிகடந்து கன்னி வெளியேவா மட்டற்ற பூப்பு மகிழ்வு.
  8. 8 கருப்பையின் விழிநீர் மகிழ்வுஆய்க் கருப்பை மகவைச் சுமக்கா இகழ்வில் விழிநீர் இதுவே - தகுதியாய்ப் பத்தாம் திங்களில் பச்சிளஞ் சேய்தர சுத்தமாய் ஆக்கும் செயல்.
  9. 9 படைப்பின் இறைவி செயல்ஆல் உலகைச் செழிக்கவே செய்யும் இயற்கையின் அற்புதம் இஃதே - மயக்கத்தால் கல்லா மூடரைக் கடிந்தொதுக் கிப்புவியே எல்லாம் இறைவி என்பார்.
  10. 10 பிறப்பின் மூலம் என்பார் பெரியோர் இதுபுனித இரத்தமென்று அன்பால் அகிலம் அகமகிழ - முன்பே பிறப்பிற்கும் மூலப் பெருமை இதுவே சிறப்பாய்ப் போற்றுதல் சிறப்பு.
  11. 11 உணர்வுகளின் ஊசல் சிறப்புஆய்ப் பாயும் குருதியின் வேகத்தால் உறைந்த உணர்வுகள் ஊசலாம் - குறைவின்றி கள்ளமில் லாப்பெண்ணைக் கனிவாகக் காப்பதே தெள்ளிய மாந்தர் திறம்.
  12. 12 அறமெனும் பூப்பு திறம்பாடுங் காருண்யப் பூப்பினை யென்றும் அறம்போல் அகத்தில் அறிவோம் - நிறம்வாழப் பெண்ணாய் உதித்த பெருமையைப் போற்றிடவே மண்ணில் மிளிரும் வியப்பு.