உதிரம் சிந்துவது போர்க்களங்களில் மரணத்தின் குறியீடு; ஆனால், ஒரு பெண்ணின் கருவறையில் அது படைப்பின் குறியீடு! சமூகம் ‘தீட்டு’ என்று ஒதுக்கிவைத்த மாதவிடாயை, உலக உயிர்கள் உதிப்பதற்கான ‘மூலப் பெருமை’ என்று கொண்டாடும் கவிதைச் சுழற்சி இது. மாதந்தோறும் பெண்ணின் உடலில் நிகழும் இயற்கையின் சுழற்சியை, அதே சுழற்சி வடிவமான 'அந்தாதி'யில் செந்தமிழால் போற்றும் மாபெரும் முயற்சி.