வணக்கம்

சித்தப்பித்தன்

சித்தன்யான் தமிழ்ப்பற் றாலே பித்தநான் இப்புவிக்கே அத்தன் அருளால்புண்ணி யப்பன் - வழியான் நித்தமும் என்னுயிரால் என்றும் வினையாற்ற சித்தமாய் வந்திப்பேன் இன்று.

85 படைப்புகள் · 10 பிரிவுகள்

புதியவை

சமீபத்தியவை

அனைத்தையும் பார்
சிவ வெண்பாக்கள்

செய்ந்நன்றி - 10

தொழில்வளப் பேறு

கற்ற தொழிலை விருப்புடனே நாஞ்செய்ய உற்ற பெரும்பொருள் ஓங்கியதே; - நற்றவத்தால் குற்ற மிலாது குறையின்றி வாழவே பெற்றேனே நற்சிவனே பேறு.
19 ஆகஸ்ட் 2026 17
சிவ வெண்பாக்கள்

செய்ந்நன்றி - 9

எண்ணியாங்கு எய்தும் வரம்

உற்ற நினைவெல்லாம் உன்னதமாய்ச் செய்திடவும் சுற்ற நினைத்த பொழுதினில் ஏகவும் - நற்றுணையாய்ப் பெற்றதொரு நன்மனத்தைப் பேரருளாய் எந்நாளும் பெற்றேனே நற்சிவனே பேறு.
19 ஆகஸ்ட் 2026 15
சிவ வெண்பாக்கள்

செய்ந்நன்றி - 8

உடன்பிறப்புப் பேறு

செற்றலரை அண்டவிடார்; சேர்ந்ததொரு துன்பத்தில் உற்ற துணையாகி யுள்ளன்பால் முன்நிற்பார்; - நற்றவத்தால் சுற்றமாய் நின்ற உடன்பிறப்பை நற்றுணையாப் பெற்றேனே நற்சிவனே பேறு.
14 ஆகஸ்ட் 2026 18
சிவ வெண்பாக்கள்

செய்ந்நன்றி - 7

மேன்மக்கள் குருவருள்

உற்ற உலகறிவை ஏற்றம்போல் கற்பித்து முற்றுமாய் வாழும் பொழுதெல்லாம் - நற்றுணையாய் உற்று வழிகாட்டும் மேன்மக்கள் நற்குருவைப் பெற்றேனே நற்சிவனே பேறு.
14 ஆகஸ்ட் 2026 20
சிவ வெண்பாக்கள்

செய்ந்நன்றி - 6

சிறந்த மக்கட்பேறு

உற்ற உடல்நலமும் ஊர்போற்றும் சிந்தனையும் குற்றமிலா நற்குணமும் கொண்டிலங்க; - நற்றவத்தால் கற்றறிந்து மேலோங்கும் கண்ணிய நன்மக்களைப் பெற்றேனே நற்சிவனே பேறு
14 ஆகஸ்ட் 2026 18
சிவ வெண்பாக்கள்

செய்ந்நன்றி - 5

ஈசனளித்த நற்பெற்றோர்

ஆற்றும் அரவணைப்பை அன்பாக எந்நாளும் ஊற்றும் உயிரன்பால் ஓங்கி வளர்த்தார்; - பெருமையாய்ப் போற்றும் தகுதியுள்ள பெற்றோரைப் பெற்றேன் சிவனே அளித்தாய் சிறந்து.
14 ஆகஸ்ட் 2026 19
சிவ வெண்பாக்கள்

செய்ந்நன்றி - 4

தொடர்கல்விப் பேறு

கற்றல் சிறக்கக் கவினார் தொடர்கல்வி பற்றாகத் தந்தாய் பரமனே! - நற்றவத்தால் பெற்றேன் பெருமையைப் பேரின்ப மாகவே பெற்றேனே பேறாய்ச் சிவனே.
14 ஆகஸ்ட் 2026 20
சிவ வெண்பாக்கள்

செய்ந்நன்றி - 3

இறையருள் அரண்

இல்லமும் நானும் இனிதாக வாழ்வதற்குப் நல்லருளை ஈந்தாய் அரனே! - அகிலத்தில் அல்லல்கள் தீர்க்கும் அரணாகி நின்றதனால் வெல்லும் பெருங்காவல் பேறு.
14 ஆகஸ்ட் 2026 18
சிவ வெண்பாக்கள்

செய்ந்நன்றி - 2

குறையற்ற நல்வரம்

ஊன மிலாத உடலளித்தாய்; உய்வதற்கு ஊன மிலாத உளமளித்தாய்; - தேனார் சிவனே உனைப்போற்றும் சீரிய பேற்றை வரமே அளித்தாய் மகிழ்ந்து.
14 ஆகஸ்ட் 2026 18

தொகுப்புகள்

16 செல்வங்கள்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க

18 / 18 எழுதியாச்சு
செந்நீர் அந்தாதி

உயிர்களை உருவாக்கும் இறைவி எனப் போற்றும் செந்நீர் அந்தாதி 12 வெண்பாக்கள்.

12 / 12 எழுதியாச்சு
அர்த்தமற்ற கவிதைகள் 31 / 150 எழுதியாச்சு · 119 மீதம் சிவ-சீவ ஐக்கியம்

உன்னதமான அத்துவித தத்துவத்தை "அவனன்றி நானில்லை, நானின்றி அவனில்லை, நாங்கள் இன்றி எவ்வுலகும் இல்லை"

2 / 108 எழுதியாச்சு · 106 மீதம்
செய்ந்நன்றி முழக்கம்

செய்ந்நன்றி செய்ந்நன்றி உணர்வோம் செய்ந்நன்றி! செய்ந்நன்றி செய்ந்நன்றி உரைப்போம் செய்ந்நன்றி!

10 / 108 எழுதியாச்சு · 98 மீதம்
108 சிவன் வெண்பாக்கள்

ஆதிசிவனின் அருட்பெருமையைத் தமிழென்னும் அட்சரங்களால் அர்ச்சிக்கும் 108 செந்தமிழ் வெண்பாக்களின் திருத்திரட்டு

1 / 108 எழுதியாச்சு · 107 மீதம்