படைப்புக்குச் செல்
சித்தப்பித்தன்
சித்தப்பித்தனின் பிதற்றல்கள்
தமிழ்
EN
காட்சி
பெரிய அட்டைகள்
அட்டைகள்
சிறிய அட்டைகள்
பட்டியல்
விவரம்
•
உள்ளடக்கம்
சுவரொட்டிகள்
ஒலி வடிவம்
முகப்பு
வெண்பா
சிவ வெண்பாக்கள்
கவிதைகள்
ஹைக்கூ
மேலும்
பாடல்கள்
தத்துவங்கள்
கட்டுரைகள்
எண்ணங்கள்
தகவல்கள்
தொகுப்புகள்
16 செல்வங்கள்
18
செந்நீர் அந்தாதி
12
அர்த்தமற்ற கவிதைகள்
31 / 150
சிவ-சீவ ஐக்கியம்
2 / 108
செய்ந்நன்றி முழக்கம்
10 / 108
108 சிவன் வெண்பாக்கள்
1 / 108
எல்லாத் தொகுப்புகளும்
உலாவு
எங்கிருந்து தொடங்குவது
பொருளடக்கம்
அகர வரிசை
காலக் கோடு
திணை
தொடக்கமும் முடிவும்
என் அலமாரி
தற்செயலாக ஒன்று
நூலகம்
அரும்பத அகராதி
தமிழ்ப் பேரகராதி
தமிழ் இலக்கணம்
பற்றி
காட்சி
பெரிய அட்டைகள்
அட்டைகள்
சிறிய அட்டைகள்
பட்டியல்
விவரம்
•
உள்ளடக்கம்
சுவரொட்டிகள்
ஒலி வடிவம்
அனைத்துப் படைப்புகள்
85 முடிவுகள்
அனைத்துப் பிரிவுகள்
பாடல்கள்
சிவ வெண்பாக்கள்
தத்துவங்கள்
ஹைக்கூ
வெண்பா
கவிதைகள்
கட்டுரைகள்
மேலும்
எண்ணங்கள்
தகவல்கள்
தொகுப்புகள்
16 செல்வங்கள்
செந்நீர் அந்தாதி
அர்த்தமற்ற கவிதைகள்
சிவ-சீவ ஐக்கியம்
செய்ந்நன்றி முழக்கம்
108 சிவன் வெண்பாக்கள்
அனைத்துப் பா வகைகள்
வெண்பா (38)
புதுக்கவிதை (35)
ஆசிரியப்பா (1)
இன்னிசை வெண்பா (1)
நேரிசை வெண்பா (1)
புதியவை முதலில்
பழையவை முதலில்
அ → ஔ
அதிகம் படித்தவை
தேடு
பக்கத்துக்கு
12
24
50
100
எல்லாம்
அகர வரிசை
செய்ந்நன்றி - 10
கற்ற தொழிலை விருப்புடனே நாஞ்செய்ய
உற்ற பெரும்பொருள் ஓங்கியதே; - நற்றவத்தால்
குற்ற மிலாது குறையின்றி வாழவே
பெற்றேனே நற்சிவனே பேறு.
செய்ந்நன்றி - 9
உற்ற நினைவெல்லாம் உன்னதமாய்ச் செய்திடவும்
சுற்ற நினைத்த பொழுதினில் ஏகவும் - நற்றுணையாய்ப்
பெற்றதொரு நன்மனத்தைப் பேரருளாய் எந்நாளும்
பெற்றேனே நற்சிவனே பேறு.
செய்ந்நன்றி - 8
செற்றலரை அண்டவிடார்; சேர்ந்ததொரு துன்பத்தில்
உற்ற துணையாகி யுள்ளன்பால் முன்நிற்பார்; - நற்றவத்தால்
சுற்றமாய் நின்ற உடன்பிறப்பை நற்றுணையாப்
பெற்றேனே நற்சிவனே பேறு.
செய்ந்நன்றி - 7
உற்ற உலகறிவை ஏற்றம்போல் கற்பித்து
முற்றுமாய் வாழும் பொழுதெல்லாம் - நற்றுணையாய்
உற்று வழிகாட்டும் மேன்மக்கள் நற்குருவைப்
பெற்றேனே நற்சிவனே பேறு.
செய்ந்நன்றி - 6
உற்ற உடல்நலமும் ஊர்போற்றும் சிந்தனையும்
குற்றமிலா நற்குணமும் கொண்டிலங்க; - நற்றவத்தால்
கற்றறிந்து மேலோங்கும் கண்ணிய நன்மக்களைப்
பெற்றேனே நற்சிவனே பேறு
செய்ந்நன்றி - 5
ஆற்றும் அரவணைப்பை அன்பாக எந்நாளும்
ஊற்றும் உயிரன்பால் ஓங்கி வளர்த்தார்; - பெருமையாய்ப்
போற்றும் தகுதியுள்ள பெற்றோரைப் பெற்றேன்
சிவனே அளித்தாய் சிறந்து.
செய்ந்நன்றி - 4
கற்றல் சிறக்கக் கவினார் தொடர்கல்வி
பற்றாகத் தந்தாய் பரமனே! - நற்றவத்தால்
பெற்றேன் பெருமையைப் பேரின்ப மாகவே
பெற்றேனே பேறாய்ச் சிவனே.
செய்ந்நன்றி - 3
இல்லமும் நானும் இனிதாக வாழ்வதற்குப்
நல்லருளை ஈந்தாய் அரனே! - அகிலத்தில்
அல்லல்கள் தீர்க்கும் அரணாகி நின்றதனால்
வெல்லும் பெருங்காவல் பேறு.
செய்ந்நன்றி - 2
ஊன மிலாத உடலளித்தாய்; உய்வதற்கு
ஊன மிலாத உளமளித்தாய்; - தேனார்
சிவனே உனைப்போற்றும் சீரிய பேற்றை
வரமே அளித்தாய் மகிழ்ந்து.
செய்ந்நன்றி - 1
மானிடமாய் இம்மா நிலத்தில் பிறப்பெடுத்து
தேனிசனைப் போற்றும் வரம்பெற்றேன் - ஊனில்
உருகி உமையாளன் சேவடியை நாளும்
தொழுதேத்த வாய்த்ததுவே பேறு.
சிவ-சீவ ஐக்கியம் : ஆதி நிலை - 1
அப்பன் சிவனருளால் ஆவனயாம் எவ்வுயிரும்
செப்பரிய சோதித் திருவுருவே - செப்பினால்
அவனன்றி நானில்லை நானின்றி ஈசன்
புவனத்தில் இல்லை புரிந்து.
சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள்
சித்தம் சிவமாக்கிச் செப்பிடுமிந் நூல்தழைக்க
நித்தமும் நமச்சி வாயநம - வித்தகமாய்ப்
பித்தன் எனநின்று பேரின்பம் ஈந்துலகை
உய்த்திடுவான் தாளே துணை.
வாடிக்கையின் வேடிக்கை
இயந்திரத் தாளமிடும்
தினசரிச் சுழற்சி;
நேற்றைய விடியலின்
அதே தொடர்ச்சி!
வெட்கத்தின் கூச்சம்
கன்னங்களின் சிவப்பில்
காதல் பூக்கும் வசந்தம்;
சொல்லத் துடிக்கும் வார்த்தை
நாக்கின் நுனியில் முட்டி,
சொற்களின் பற்கள்
மென்மையாகத் தீண்டினாலும்
வலியெடுக்கும் வன்மம்,
இதழ்களின் மறைவில்
ஒளிந்திருக்கும் கூர்மை!
குழலின் புயல்
மென்மையான இசையின்
மறைவில் ஒளிந்திருக்கும்
மௌனத்தின் பேரிரைச்சல்!
அகத்தின் புறம்
வெளியே தெரியும் பிம்பம்,
உள்ளே உறையும் நிழலின்
ஒற்றைப் பிரதிபலிப்பு!
ஆட்டத்தின் ஆட்டம்
நகர்த்தும் கைகளில்
நடுங்கும் காய்கள்;
மேடையின் விதிகளோ
முடிவற்ற நுணுக்கங்கள்!
புதிரின் புதிர்
விடை காண முயலும்
விசித்திரமான வேட்கை;
ஒவ்வொரு விடைக்குள்ளும்
ஒளிந்திருக்கும் புதிய கேள்வி!
கல்வியில் கேள்வி
புத்தகப் பக்கங்களில்
புதைந்து கிடக்கும் விடை;
கேள்வி கேட்கும் அறிவோ
கேள்வியாய் நின்று தவிக்கும்!
பக்தியின் முக்தி
வெளிப்புறச் சடங்கின்
வெற்றுப் படலங்கள் விலக,
உள்ளே உறையும்
உண்மையின் தரிசனம்!
உளியின் வலி
கல்லை உடைக்கும் போது
அறிவதில்லை பாறை;
உளியின் ஒவ்வொரு அடிக்கும் பின்னே,
உருவாகும் தெய்வத்தின் விளிம்பு!
சிந்தனை துகள்
கடல் முழுவதையும்
கண்ணாடிக்கு அடியில் சிறைவைக்க
முயலும் அற்பத்தனமான ஆசை!
அறத்தின் ஆற்றல்
அநீதியின் புயல் வீசும்
அனல் மிகுந்த காலத்திலும்,
அசையாது நின்றிருக்கும்
அறத்தின் மெல்லிய வேர்!
1
2
3
4
பக்கம் 1 / 4