All pieces

85 results

Shiva Venbas

செய்ந்நன்றி - 10

தொழில்வளப் பேறு

கற்ற தொழிலை விருப்புடனே நாஞ்செய்ய உற்ற பெரும்பொருள் ஓங்கியதே; - நற்றவத்தால் குற்ற மிலாது குறையின்றி வாழவே பெற்றேனே நற்சிவனே பேறு.
19 August 2026 14
Shiva Venbas

செய்ந்நன்றி - 9

எண்ணியாங்கு எய்தும் வரம்

உற்ற நினைவெல்லாம் உன்னதமாய்ச் செய்திடவும் சுற்ற நினைத்த பொழுதினில் ஏகவும் - நற்றுணையாய்ப் பெற்றதொரு நன்மனத்தைப் பேரருளாய் எந்நாளும் பெற்றேனே நற்சிவனே பேறு.
19 August 2026 12
Shiva Venbas

செய்ந்நன்றி - 8

உடன்பிறப்புப் பேறு

செற்றலரை அண்டவிடார்; சேர்ந்ததொரு துன்பத்தில் உற்ற துணையாகி யுள்ளன்பால் முன்நிற்பார்; - நற்றவத்தால் சுற்றமாய் நின்ற உடன்பிறப்பை நற்றுணையாப் பெற்றேனே நற்சிவனே பேறு.
14 August 2026 16
Shiva Venbas

செய்ந்நன்றி - 7

மேன்மக்கள் குருவருள்

உற்ற உலகறிவை ஏற்றம்போல் கற்பித்து முற்றுமாய் வாழும் பொழுதெல்லாம் - நற்றுணையாய் உற்று வழிகாட்டும் மேன்மக்கள் நற்குருவைப் பெற்றேனே நற்சிவனே பேறு.
14 August 2026 16
Shiva Venbas

செய்ந்நன்றி - 6

சிறந்த மக்கட்பேறு

உற்ற உடல்நலமும் ஊர்போற்றும் சிந்தனையும் குற்றமிலா நற்குணமும் கொண்டிலங்க; - நற்றவத்தால் கற்றறிந்து மேலோங்கும் கண்ணிய நன்மக்களைப் பெற்றேனே நற்சிவனே பேறு
14 August 2026 15
Shiva Venbas

செய்ந்நன்றி - 5

ஈசனளித்த நற்பெற்றோர்

ஆற்றும் அரவணைப்பை அன்பாக எந்நாளும் ஊற்றும் உயிரன்பால் ஓங்கி வளர்த்தார்; - பெருமையாய்ப் போற்றும் தகுதியுள்ள பெற்றோரைப் பெற்றேன் சிவனே அளித்தாய் சிறந்து.
14 August 2026 16
Shiva Venbas

செய்ந்நன்றி - 4

தொடர்கல்விப் பேறு

கற்றல் சிறக்கக் கவினார் தொடர்கல்வி பற்றாகத் தந்தாய் பரமனே! - நற்றவத்தால் பெற்றேன் பெருமையைப் பேரின்ப மாகவே பெற்றேனே பேறாய்ச் சிவனே.
14 August 2026 14
Shiva Venbas

செய்ந்நன்றி - 3

இறையருள் அரண்

இல்லமும் நானும் இனிதாக வாழ்வதற்குப் நல்லருளை ஈந்தாய் அரனே! - அகிலத்தில் அல்லல்கள் தீர்க்கும் அரணாகி நின்றதனால் வெல்லும் பெருங்காவல் பேறு.
14 August 2026 14
Shiva Venbas

செய்ந்நன்றி - 2

குறையற்ற நல்வரம்

ஊன மிலாத உடலளித்தாய்; உய்வதற்கு ஊன மிலாத உளமளித்தாய்; - தேனார் சிவனே உனைப்போற்றும் சீரிய பேற்றை வரமே அளித்தாய் மகிழ்ந்து.
14 August 2026 15
Shiva Venbas

செய்ந்நன்றி - 1

பிறவிப் பெரும்பேறு

மானிடமாய் இம்மா நிலத்தில் பிறப்பெடுத்து தேனிசனைப் போற்றும் வரம்பெற்றேன் - ஊனில் உருகி உமையாளன் சேவடியை நாளும் தொழுதேத்த வாய்த்ததுவே பேறு.
14 August 2026 9
சிவ-சீவ ஐக்கியம் : ஆதி நிலை - 1
Shiva Venbas

சிவ-சீவ ஐக்கியம் : ஆதி நிலை - 1

அப்பன் சிவனருளால் ஆவனயாம் எவ்வுயிரும் செப்பரிய சோதித் திருவுருவே - செப்பினால் அவனன்றி நானில்லை நானின்றி ஈசன் புவனத்தில் இல்லை புரிந்து.
11 August 2026 13
சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள்
Shiva Venbas

சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள்

சித்தம் சிவமாக்கிச் செப்பிடுமிந் நூல்தழைக்க நித்தமும் நமச்சி வாயநம - வித்தகமாய்ப் பித்தன் எனநின்று பேரின்பம் ஈந்துலகை உய்த்திடுவான் தாளே துணை.
11 August 2026 15
Kavithaigal

வெட்கத்தின் கூச்சம்

கன்னங்களின் சிவப்பில் காதல் பூக்கும் வசந்தம்; சொல்லத் துடிக்கும் வார்த்தை நாக்கின் நுனியில் முட்டி,
11 August 2026 11
Kavithaigal

சொற்களின் பற்கள்

மென்மையாகத் தீண்டினாலும் வலியெடுக்கும் வன்மம், இதழ்களின் மறைவில் ஒளிந்திருக்கும் கூர்மை!
11 August 2026 9
Kavithaigal

குழலின் புயல்

மென்மையான இசையின் மறைவில் ஒளிந்திருக்கும் மௌனத்தின் பேரிரைச்சல்!  
11 August 2026 9
Kavithaigal

புதிரின் புதிர்

விடை காண முயலும் விசித்திரமான வேட்கை; ஒவ்வொரு விடைக்குள்ளும் ஒளிந்திருக்கும் புதிய கேள்வி!
11 August 2026 9
Kavithaigal

கல்வியில் கேள்வி

புத்தகப் பக்கங்களில் புதைந்து கிடக்கும் விடை; கேள்வி கேட்கும் அறிவோ கேள்வியாய் நின்று தவிக்கும்!
11 August 2026 8
Kavithaigal

உளியின் வலி

கல்லை உடைக்கும் போது அறிவதில்லை பாறை; உளியின் ஒவ்வொரு அடிக்கும் பின்னே, உருவாகும் தெய்வத்தின் விளிம்பு!
11 August 2026 8
Kavithaigal

சிந்தனை துகள்

கடல் முழுவதையும் கண்ணாடிக்கு அடியில் சிறைவைக்க முயலும் அற்பத்தனமான ஆசை!  
11 August 2026 8
Kavithaigal

அறத்தின் ஆற்றல்

அநீதியின் புயல் வீசும் அனல் மிகுந்த காலத்திலும், அசையாது நின்றிருக்கும் அறத்தின் மெல்லிய வேர்!
11 August 2026 7