அனைத்துப் படைப்புகள்

85 முடிவுகள்

  1. செய்ந்நன்றி - 10 கற்ற தொழிலை விருப்புடனே நாஞ்செய்ய உற்ற பெரும்பொருள் ஓங்கியதே; - நற்றவத்தால் குற்ற மிலாது குறையின்றி வாழவே பெற்றேனே நற்சிவனே பேறு.
  2. செய்ந்நன்றி - 9 உற்ற நினைவெல்லாம் உன்னதமாய்ச் செய்திடவும் சுற்ற நினைத்த பொழுதினில் ஏகவும் - நற்றுணையாய்ப் பெற்றதொரு நன்மனத்தைப் பேரருளாய் எந்நாளும் பெற்றேனே நற்சிவனே பேறு.
  3. செய்ந்நன்றி - 8 செற்றலரை அண்டவிடார்; சேர்ந்ததொரு துன்பத்தில் உற்ற துணையாகி யுள்ளன்பால் முன்நிற்பார்; - நற்றவத்தால் சுற்றமாய் நின்ற உடன்பிறப்பை நற்றுணையாப் பெற்றேனே நற்சிவனே பேறு.
  4. செய்ந்நன்றி - 7 உற்ற உலகறிவை ஏற்றம்போல் கற்பித்து முற்றுமாய் வாழும் பொழுதெல்லாம் - நற்றுணையாய் உற்று வழிகாட்டும் மேன்மக்கள் நற்குருவைப் பெற்றேனே நற்சிவனே பேறு.
  5. செய்ந்நன்றி - 6 உற்ற உடல்நலமும் ஊர்போற்றும் சிந்தனையும் குற்றமிலா நற்குணமும் கொண்டிலங்க; - நற்றவத்தால் கற்றறிந்து மேலோங்கும் கண்ணிய நன்மக்களைப் பெற்றேனே நற்சிவனே பேறு
  6. செய்ந்நன்றி - 5 ஆற்றும் அரவணைப்பை அன்பாக எந்நாளும் ஊற்றும் உயிரன்பால் ஓங்கி வளர்த்தார்; - பெருமையாய்ப் போற்றும் தகுதியுள்ள பெற்றோரைப் பெற்றேன் சிவனே அளித்தாய் சிறந்து.
  7. செய்ந்நன்றி - 4 கற்றல் சிறக்கக் கவினார் தொடர்கல்வி பற்றாகத் தந்தாய் பரமனே! - நற்றவத்தால் பெற்றேன் பெருமையைப் பேரின்ப மாகவே பெற்றேனே பேறாய்ச் சிவனே.
  8. செய்ந்நன்றி - 3 இல்லமும் நானும் இனிதாக வாழ்வதற்குப் நல்லருளை ஈந்தாய் அரனே! - அகிலத்தில் அல்லல்கள் தீர்க்கும் அரணாகி நின்றதனால் வெல்லும் பெருங்காவல் பேறு.
  9. செய்ந்நன்றி - 2 ஊன மிலாத உடலளித்தாய்; உய்வதற்கு ஊன மிலாத உளமளித்தாய்; - தேனார் சிவனே உனைப்போற்றும் சீரிய பேற்றை வரமே அளித்தாய் மகிழ்ந்து.
  10. செய்ந்நன்றி - 1 மானிடமாய் இம்மா நிலத்தில் பிறப்பெடுத்து தேனிசனைப் போற்றும் வரம்பெற்றேன் - ஊனில் உருகி உமையாளன் சேவடியை நாளும் தொழுதேத்த வாய்த்ததுவே பேறு.
  11. சிவ-சீவ ஐக்கியம் : ஆதி நிலை - 1 அப்பன் சிவனருளால் ஆவனயாம் எவ்வுயிரும் செப்பரிய சோதித் திருவுருவே - செப்பினால் அவனன்றி நானில்லை நானின்றி ஈசன் புவனத்தில் இல்லை புரிந்து.
  12. சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள் சித்தம் சிவமாக்கிச் செப்பிடுமிந் நூல்தழைக்க நித்தமும் நமச்சி வாயநம - வித்தகமாய்ப் பித்தன் எனநின்று பேரின்பம் ஈந்துலகை உய்த்திடுவான் தாளே துணை.