சிவ-சீவ ஐக்கியம்

உன்னதமான அத்துவித தத்துவத்தை "அவனன்றி நானில்லை, நானின்றி அவனில்லை, நாங்கள் இன்றி எவ்வுலகும் இல்லை"

2 / 108 எழுதியாச்சு · 106 மீதம்

நூல் போலப் படி

முன்னுரை

நேரிசை வெண்பா (இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை பிறழாமல், ஈற்றடி முச்சீராய், ஏனைய அடிகள் நாற்சீராய், இரண்டாம் எழுத்து எதுகை ஒன்றி, தனிச்சொல் பெற்று) முற்றிலும் இலக்கணம் அமையப் பெற்ற 108 வெண்பாபாக்களும் அதன் பொருள் விளக்கமும்
1
சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள்
சிவ வெண்பாக்கள்

சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள்

சித்தம் சிவமாக்கிச் செப்பிடுமிந் நூல்தழைக்க நித்தமும் நமச்சி வாயநம - வித்தகமாய்ப் பித்தன் எனநின்று பேரின்பம் ஈந்துலகை உய்த்திடுவான் தாளே துணை.
11 ஆகஸ்ட் 2026 15
2
சிவ-சீவ ஐக்கியம் : ஆதி நிலை - 1
சிவ வெண்பாக்கள்

சிவ-சீவ ஐக்கியம் : ஆதி நிலை - 1

அப்பன் சிவனருளால் ஆவனயாம் எவ்வுயிரும் செப்பரிய சோதித் திருவுருவே - செப்பினால் அவனன்றி நானில்லை நானின்றி ஈசன் புவனத்தில் இல்லை புரிந்து.
11 ஆகஸ்ட் 2026 13