Siva-Seeva Ikkiyam 2 works

Siva-Seeva Ikkiyam

உன்னதமான அத்துவித தத்துவத்தை "அவனன்றி நானில்லை, நானின்றி அவனில்லை, நாங்கள் இன்றி எவ்வுலகும் இல்லை"

2 works

நேரிசை வெண்பா (இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை பிறழாமல், ஈற்றடி முச்சீராய், ஏனைய அடிகள் நாற்சீராய், இரண்டாம் எழுத்து எதுகை ஒன்றி, தனிச்சொல் பெற்று) முற்றிலும் இலக்கணம் அமையப் பெற்ற 108 வெண்பாபாக்களும் அதன் பொருள் விளக்கமும்
1

சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள்

சித்தம் சிவமாக்கிச் செப்பிடுமிந் நூல்தழைக்க நித்தமும் நமச்சி வாயநம - வித்தகமாய்ப் பித்தன் எனநின்று பேரின்பம் ஈந்துலகை உய்த்திடுவான் தாளே துணை.
என் உள்ளத்தைச் சிவமயமாக மாற்றி, யாம் எழுதும் இந்த நூல் உலகெங்கும் சிறப்படைய, 'நமச்சிவாய' மந்திரமே துணையாகட்டும். பித்தன் போல எங்கும் நிறைந்து நின்று பேரின்பம் அளிக்கும் இறைவனின் திருவடிகளே இந்த நூலுக்குக் காப்பு.
Open this on its own
1
2

சிவ-சீவ ஐக்கியம் : ஆதி நிலை - 1

அப்பன் சிவனருளால் ஆவனயாம் எவ்வுயிரும் செப்பரிய சோதித் திருவுருவே - செப்பினால் அவனன்றி நானில்லை நானின்றி ஈசன் புவனத்தில் இல்லை புரிந்து.
தந்தை சிவனின் அருளால் எல்லா உயிர்களும் தோன்றின. அவன் சொல்லற்கரிய ஒளி வடிவானவன். அவன் இல்லாமல் எனக்குத் தனி இருப்பு இல்லை; நான் (உயிர்) இல்லையென்றால் அவனுக்கு இந்த உலகத்தில் வெளிப்பாடு இல்லை.
Open this on its own
2

The book ends here.

List

Tap an edge, or use the ← → keys. Swipe on a phone.