செய்ந்நன்றி முழக்கம்

செய்ந்நன்றி செய்ந்நன்றி உணர்வோம் செய்ந்நன்றி! செய்ந்நன்றி செய்ந்நன்றி உரைப்போம் செய்ந்நன்றி!

10 / 108 எழுதியாச்சு · 98 மீதம்

வாரத்துக்குச் சராசரி 1.0 · இந்த வேகத்தில் 16 அக்டோபர் 2028 அன்று நிறைவு

நூல் போலப் படி

முன்னுரை

செய்ந்நன்றி செய்ந்நன்றி உணர்வோம் செய்ந்நன்றி! செய்ந்நன்றி செய்ந்நன்றி உரைப்போம் செய்ந்நன்றி!
  1. 1 செய்ந்நன்றி - 1 மானிடமாய் இம்மா நிலத்தில் பிறப்பெடுத்து தேனிசனைப் போற்றும் வரம்பெற்றேன் - ஊனில் உருகி உமையாளன் சேவடியை நாளும் தொழுதேத்த வாய்த்ததுவே பேறு.
  2. 2 செய்ந்நன்றி - 2 ஊன மிலாத உடலளித்தாய்; உய்வதற்கு ஊன மிலாத உளமளித்தாய்; - தேனார் சிவனே உனைப்போற்றும் சீரிய பேற்றை வரமே அளித்தாய் மகிழ்ந்து.
  3. 3 செய்ந்நன்றி - 3 இல்லமும் நானும் இனிதாக வாழ்வதற்குப் நல்லருளை ஈந்தாய் அரனே! - அகிலத்தில் அல்லல்கள் தீர்க்கும் அரணாகி நின்றதனால் வெல்லும் பெருங்காவல் பேறு.
  4. 4 செய்ந்நன்றி - 4 கற்றல் சிறக்கக் கவினார் தொடர்கல்வி பற்றாகத் தந்தாய் பரமனே! - நற்றவத்தால் பெற்றேன் பெருமையைப் பேரின்ப மாகவே பெற்றேனே பேறாய்ச் சிவனே.
  5. 5 செய்ந்நன்றி - 5 ஆற்றும் அரவணைப்பை அன்பாக எந்நாளும் ஊற்றும் உயிரன்பால் ஓங்கி வளர்த்தார்; - பெருமையாய்ப் போற்றும் தகுதியுள்ள பெற்றோரைப் பெற்றேன் சிவனே அளித்தாய் சிறந்து.
  6. 6 செய்ந்நன்றி - 6 உற்ற உடல்நலமும் ஊர்போற்றும் சிந்தனையும் குற்றமிலா நற்குணமும் கொண்டிலங்க; - நற்றவத்தால் கற்றறிந்து மேலோங்கும் கண்ணிய நன்மக்களைப் பெற்றேனே நற்சிவனே பேறு
  7. 7 செய்ந்நன்றி - 7 உற்ற உலகறிவை ஏற்றம்போல் கற்பித்து முற்றுமாய் வாழும் பொழுதெல்லாம் - நற்றுணையாய் உற்று வழிகாட்டும் மேன்மக்கள் நற்குருவைப் பெற்றேனே நற்சிவனே பேறு.
  8. 8 செய்ந்நன்றி - 8 செற்றலரை அண்டவிடார்; சேர்ந்ததொரு துன்பத்தில் உற்ற துணையாகி யுள்ளன்பால் முன்நிற்பார்; - நற்றவத்தால் சுற்றமாய் நின்ற உடன்பிறப்பை நற்றுணையாப் பெற்றேனே நற்சிவனே பேறு.
  9. 9 செய்ந்நன்றி - 9 உற்ற நினைவெல்லாம் உன்னதமாய்ச் செய்திடவும் சுற்ற நினைத்த பொழுதினில் ஏகவும் - நற்றுணையாய்ப் பெற்றதொரு நன்மனத்தைப் பேரருளாய் எந்நாளும் பெற்றேனே நற்சிவனே பேறு.
  10. 10 செய்ந்நன்றி - 10 கற்ற தொழிலை விருப்புடனே நாஞ்செய்ய உற்ற பெரும்பொருள் ஓங்கியதே; - நற்றவத்தால் குற்ற மிலாது குறையின்றி வாழவே பெற்றேனே நற்சிவனே பேறு.