108 சிவன் வெண்பாக்கள்

ஆதிசிவனின் அருட்பெருமையைத் தமிழென்னும் அட்சரங்களால் அர்ச்சிக்கும் 108 செந்தமிழ் வெண்பாக்களின் திருத்திரட்டு

1 / 108 எழுதியாச்சு · 107 மீதம்

நூல் போலப் படி

முன்னுரை

எங்கும் நிறைந்திருக்கும் எம்பெருமான் ஈசனை வர்ணிக்க வார்த்தைகள் ஏது? ஆயினும், அந்தச் சிவனின் அருளால் விளைந்த தமிழைக் கொண்டே அவனைத் துதிக்க விளைந்ததன் பலனே இந்த '108 சிவன் வெண்பாக்கள்'. அஷ்டோத்திரம் எனப் போற்றப்படும் 108 என்ற புனித எண்ணில், தமிழ் யாப்பிலக்கணத்தின் அரசனான 'வெண்பா' வடிவத்தில் ஆலகாலனை போற்றி பாடப்படும் வெண்பாக்கள். ஒவ்வொரு வெண்பாவும் உங்கள் மனக்கண்ணில் கயிலை நாதனைக் கொண்டுவந்து நிறுத்தும்; அகத்துயர்களைப் பனிபோல் உருக்கும்!
1

சிவன் வெற்றி வெண்பா

ஆல முண்டான் அடியாரைக் காத்திடவே காலனை யுதைத்துக் காய்ந்தானே — ஞாலத்து வெற்றி வடிவேலன் தந்தை விறல்சிவன் நற்றாள் தொழநமக் குண்டு.
பொழிப்புரை உலகைக் காப்பதற்காக நஞ்சினை (ஆலகால விஷத்தை) உண்டவனும், தன் அடியாரான மார்க்கண்டேயனைக் காக்க அந்த எமனையே காலால் உதைத்து அழித்தவனுமாகிய, உலகமே போற்றும் வெற்றி வடிவேலனின் (முருகனின்) தந்தையான ஆற்றல்மிக்க சிவபெருமானின் நல்ல திருவடிகளை நாம் தொழுது வணங்கினால், எவ்விடத்தும் எப்போதும் நமக்கு வெற்றியே உண்டாகும்!

இதைத் தனியாகத் திற