வெண்பா

தமிழ் இலக்கணத்தில் பாக்களின் (கவிதைகளின்) முதன்மையான மற்றும் மிகவும் சிறப்பு வாய்ந்த வகைகளில் ஒன்று வெண்பா. இது மிகவும் கட்டுப்பாடான இலக்கண விதிகளைக் கொண்டது; எனவே இதனை "பாக்களின் அரசன்" என்றும், இதன் இலக்கணக் கட்டுப்பாட்டை "இரும்புத்தளை" என்றும் கூறுவார்கள்.

51 படைப்புகள்

தமிழ்ப் பித்தன்
வெண்பா

தமிழ்ப் பித்தன்

சித்தன்யான் பித்தநான்

சித்தன்யான் தமிழ்ப்பற் றாலே பித்தநான் இப்புவிக்கே அத்தன் அருளால்புண்ணி யப்பன் - வழியான் நித்தமும் என்னுயிரால் என்றும் வினையாற்ற சித்தமாய் வந்திப்பேன் இன்று.
10 ஆகஸ்ட் 2026 22 5.0(1) 1
சிவ வெண்பாக்கள்

சிவசரணாகதி

ஈசனின் திருவடிகளில் முழுமையான அடைக்கலம்

அப்பனே சிவனேஎன் ஆருயிர் நாதனே! அகிலத்தை ஆளுகின்ற அரசே யப்பா! எப்பொழுதும் என்சிந்தை எண்ணமும் செயல்களும்! எல்லாமும் நீயாக நின்றா யப்பா!
10 ஆகஸ்ட் 2026 14 5.0(1)
சிவ வெண்பாக்கள்

சிவ வெண்பா

**இருவினைத் தீயை இடறிக் களைந்து மருவினைத் தீர்க்கும் மதியாய் - ஒருநொடிக்குள் ஈசன் எனையிழுத்துத் தன்வசமாத் தந்திடுவான் வீசும்கருணை வியன்.**
9 ஆகஸ்ட் 2026 66 3.5(2)
சிவ வெண்பாக்கள்

அறியாமை நீங்குதல்

வல்வினைகள் > முன்போல நில்லா முறிந்த

நீல விடம்உண்ட நிர்மலனைக் காளத்தியான் ஆல நிழலமர்ந்த அண்ணலை — ஞாலத்து அன்போடு போற்றித் துதிப்பார்க்கு வல்வினைகள் முன்போல நில்லா முறிந்து.
9 ஆகஸ்ட் 2026 15
சிவ வெண்பாக்கள்

இறைவனின் பெருமை

ஈசனைநாம் பற்றிடவே தீரும் பிணி

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி பாதி உமையாளோடும் பங்கினனாய் — வேதியனாய் நெற்றிக்கண் காட்டி வினைதீர்க்கும் ஈசனைநாம் பற்றிடவே தீரும் பிணி.
9 ஆகஸ்ட் 2026 14
சிவ வெண்பாக்கள்

வெண்பா

என்னப்பன் ஈசன்

எண்ணிதயத் துள்ளே இனிக்கும் இறைவனவன் கண்ணிமைப்போல் காக்கும் கழலடியான் — மண்ணுலகில் ஈடில்லா அன்பு நிறைத்தென்னை ஆட்கொண்டான் நாடறியா என்னப்பன் ஈசன்.
9 ஆகஸ்ட் 2026 31